பன்னாலை புதுப்பிள்ளையார் ஆலயம்

பதி

பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய மேற்கு வீதியின் மருங்கே வடக்கு நோக்கி செல்லும் ஒழுங்கையில், வரத்தலம் விநாயகர் அலயத்திலிருந்து சுமார் 60 மீற்றர் தொலைவில் ஒழுங்கையின் மேற்குப்புறத்தில் பன்னாலை புதுப்பிள்ளையாரை தரிசிக்க முடியும்.

தோற்றம்.

குழந்தை பெற்ற பெண்மணி ஒருவர் 16ம் நாளே வரத்தலம் விநாயகர் ஆலயத்துக்கு வர குரு தாயையும் குழந்தையும் கோயினுள் ஏற்ற சம்பவம் மக்களையும் ஆலய உரிமையாளர்களுள் ஒருவராயுமிருந்த கார்த்திகேய குருக்களையும் வெறுப்படையச் செய்தது. இதனால் அவர்கள் தாங்கள் வழிபட ஒரு புனிதமான இடம் வேண்டுமென்று கருதியமைத்ததே இந்த அருள்மிகு புதுப்பிள்ளையார் ஆலயம்.

வளர்ச்சி

இப்பொழுது ஆலயம் அமைந்துள்ள இடத்தில் நின்றதொரு வில்வமரத்தடியிற் கட்டப்பட்ட கொட்டகையில், கருங்கல்லிற் செதுக்கப்பட்ட விநாயகர் விக்கிரகத்தை யந்திரத்தாபனஞ்செய்து பிரதிட்டை செய்தனர். இச்செயல் 1935இற்கும் 1940 இற்கும் இடையில் நடைபெற்றிருக்க வேண்டும். காலப்போக்கில் கர்ப்பக்கிரகம் சீமெந்தினால் கட்டப்பட்டு நித்திய பூசைகள் தொடர்ந்து வந்தன. 1978ம் ஆண்டு கர்ப்பக்கிரக தூபியும் சீமெந்தால் கட்டப்பட்டு அர்த்தமண்டபமும் சீமெந்தால் கட்டப்பட்டது. இங்கு நைமித்திய விழாக்கள் ஏதும் நடைபெறுவதில்லை. இவ்வாலயத்தின் தலவிருட்சம் வில்வமாகும்.

ஆலய புகைப்படங்கள்