Menu

சங்கத்தானை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்

வரலற்றையும் புகைப்படங்களையும் அனுப்பிவைத்த ஆலயத்தாருக்கு நன்றி.

க்தி பின்னமிலான் எங்கள் பிரான் என சைவசித்தந்தம் குறிப்பிடுகின்றது. சிவனிலிருந்து பிரிப்பு இல்லாதவளாகிய எம் அன்னை தில்லையிற் சிவகாமி, திருக்கடவூரில் அபிராமி, காஞ்சியில் காமாட்சி, என கோயில் கொண்டு அமைத்து பக்தர் வினை தீர்க்கிறாள். அந்த வகையில் தென்மராட்சியின் சாவகச்சோரிப் பதியிலே சாதனை நிறைந்த சங்கத்தானையில் ஸ்ரீ மீனாட்சியம்மையாக வீற்றிருந்து அருளாட்சி புரியும் எம் அம்மையின் அருட்திறம் மிக்க ஆலய வரலாறு எமது வார்த்தைகளாளல் அளக்கப்பட முடியாது.

மூலப்பொருளாய் முளைத்தவள் சக்தி
முப்பெரும் தேவியாய் திளைத்தவள் சக்தி
பாடிப் பரவி போற்றுவோம் சக்தி
பக்தர் எமக்கருள் பாலிப்பாய் சக்தி

நூற்றண்டு வரலாறு கண்ட தொன்மை சான்று சிறப்புடையதுமான எம் ஆலயத்தின் வரலாறு பூநகரியை பூர்வீகமாகக் கொண்ட ஆறுமுகம் சிவனடியான் அவரது மனைவி இலட்சுமி என்போர் சங்கத்தானை ஈழவாரியம்பதியிற் குடியேறி வாழ்ந்து வரும் காலத்திலே புராண படனப் படிப்பில் ஈடுபாடு கொண்டு சங்கத்தானை முருகன் கோயிலில் நடைபெற்று வந்த புராணப் படிப்பிலே ஈடுபட்டு வரும் காலத்திலே அவரின் கனவுக்கன்னியாகிய மீனாட்சியம்மை அவரை தன் பக்கம் திருப்பி அவரது காணியிலேயே தனக்கு ஒர் ஆலயம் அமைப்பதற்கான சம்மதத்தையும் வழங்கினாள்.

அம்பிகையின் திருவருள்ப்படி அவள் மாங்கனி அளித்து வெளிப்படுத்திய இடத்திலேயே கர்ப்பகிரகம் அமையும் படியாக 1864ம் ஆண்டு கார்த்திகை மாத திருவோண நட்சத்திரத்திலே சிறிய ஒரு ஆலயத்தை அமைத்து பூசை வழிபாட்டில் ஈடுபட்டனர். சங்கத்தானை பதியிலே அதிக நில புலங்களுக் குரித்துடையவரான ஆறுமுகம் சிவனடியாரால் ஆரம்பிக்கப்பட்ட இப்பணியில் திரு.தாம்பாப்பிள்ளை சின்னத்தம்பி என்பவரும் இனைந்து ஆலத்திற்கு காணி வழங்கினார். அத்தோடு திருமதி.அவுராம்பிள்ளை சவுரி சிமியோன்-தங்கம் அவர்களும் ஒரு பகுதி இனாமாகவும் மறுபகுதி 100/=க்கும் நாலே கால் பரப்பு காணியை வழங்கினார்.

1885ம் ஆண்டிலே ஆலயம் புனருத்தாரானம் செய்யப்பட்டதாக கல்வெட்டுச் சான்று கூறுகின்றது. அர்த்தமண்டபம், மகாமண்டபம் கல்லினாலும் தரிசனமண்டபம் மரத்தினால் செய்யப்பட்ட தூண்களாலும் அலங்கரமண்டபம் ஆறு தூண்களுடன் நிலம் மண்ணாலும் போடப்பட்டிருந்ததாக அறியக்கிடக்கின்றது. 1933-1935ல் தரிசணமண்டபக் கூரையை நீட்டி அலங்கார மண்டப கூரையுடன் இனைத்தனர். 1947ல் ஆலயத்தின் உள்விதியில் திருமஞ்சனக் கிணறு தர்மகர்த்தா திரு.சின்னத்தம்பி நாகமணி அவர்களால் அமைக்கப்பட்டது.

கணிர் கணிர் என வேளை தவறாது ஒலித்து பக்தர்களை பரவசமடையச் செய்யும் காண்டான்மணி 1967 மாசி மாத சுப வேளையில் ஏற்றப்பட்டது. இம் மணி தாவடி சிற்பி திரு.கா.சோமசுந்தரம் அவர்களால் 300 இறாத்தல்(163.3kg) எடையில் உருக்கி வர்க்கப்பட்டதாகும்.

2000ம் ஆண்டு யுத்தத்தினால் ஆலயத்திற்கு பேரழிவு ஏற்பட்டபோதிலும் பக்தர்களின் அயராத முயற்சியின் பலனாக 2004ம் ஆண்டு சித்திரைபுத்தாண்டின் பின் புனருத்தாரணம் செய்யப்பட்டு 2005ல் கும்பாபிஷேகம் நிகழ்த்தப்பட்டது.

ஆண்டு தோறும் வளர்ந்து வரும் ஆலயத்திருப்பணிகள் போல் நாளும் நாளும் அன்னையின் அருளாட்சியும் பெருகுகிறது. நாடெங்கிலும் செறிந்து வாழும் பக்தர் கூட்டங்கள் உற்சவகாலங்களில் அன்னையின் வாசலை நாடி ஓடி வந்து தத்தமது தேவைகளை விண்னப்பித்து நிறைவேற்றுகின்றனர்.

வேண்டுவார் வேண்டுவதை ஈயும் தயாநிதியாகிய பராசக்தியின் அம்சமான ஸ்ரீ மீனாட்சியம்மையின் அருளை வேண்டி இறைஞ்சி நிற்போமாக!

ஆலய புகைப்படங்கள்