"வரதபண்டிதர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்
அமுதாகரம் விட வைத்திய நூல் என்பதனை அதன் பாயிரப் பகுதியாய பார்மலி துத்திப் படவிட நாகம் மண்டலி புடையன் வளர்கரு வளலை எண்டரும் பணிக ளிவைமுத லெவைக்கும் அருந்திடு மருந்தோ டஞ்சனங் குடோரி பொருந்திய நசியம் பூச்சொடு துவாலை முறுக்கிடு மருந்துகள்…
மேலும் வாசிக்க..
பிள்ளையார் கதை “ஐங்கரற்கு வாய்ந்த நல்விரத மான்மிய” முரைப்பதற்காக எழுந்ததென அதன் சிறப்புப் பாயிரங் கூறும். அகவல் யாப்பினாற் செய்யப்பட்ட இந் நூற்கான பொருள் செந்தமிழ் முனிவன் செப்பிய காதையுங் கந்த புராணக் கவிதையி லுள்ள துவும் இலிங்க புராணத் திருந்தநற்…
மேலும் வாசிக்க..
கிள்ளைவிடு தூது காங்கேசன்துறையைச் சேர்ந்த கண்ணியவளை என்னுமிடத்திலெழுந்தருளியுள்ள குருநாத சுவாமிமீது வரத பண்டிதரால் இயற்றப்பெற்றதாகும். இது தூதுப் பிரபந்த இலக்கணத்துக்கு அமைய கலிவெண்பாவாற் செய்யப்பட்டுள்ளது. இதன் காப்புச் செய்யுளடிகளாகிய கொற்றமிகுந் தெய்வக் குருநாத சாமிதன்மேற் சொற்றதமிழ்க் கிள்ளைவிடு தூதுரைக்கக் – கற்றுணர்ந்தோர்…
மேலும் வாசிக்க..
ஏகாதசி புராணம் ஏகாதசி விரத நிர்ணயத்தையும் மகிமையையும் அவ்விரத மனுஷ்டித்தோர் சரிதங்களையும் கூறுகிறது. உருக்குமாங்கதன், வீமன் ஆகியோர் சரிதங்களை இதிற் காணலாம். சிவ விரதங்களுட் சிறந்ததாகிய சிவராத்திரி விரதத்தைக் குறித்துப் புராணம் பாடியது போலவே வரதபண்டிதர் திருமால் விரதங்களுட் சிறந்ததாகிய எகாதசி…
மேலும் வாசிக்க..
சிவராத்திரி புராணம் சிவராத்திரி விரத சரிதையை கூறும் நூலாகும். நைமியசாரணியத்திலுறையும் மாதவர் வேண்டச் சூத முனிவர் கூறுவதாக புராணம் இயங்குகின்றது. சிவராத்திரி விரதத்தின் தோற்றத்தையும், அதனை தோற்றிடும் வகையினையும் கூறிய சூத முனிவர், தொடர்ந்து சிவராத்திரி விரதத்தாற் பலனடைந்த சுகுமாரன், அங்குலன்,…
மேலும் வாசிக்க..
மயில்வாகனப் புலவர், யாழ்ப்பாணம் பண்டைத்தரிப்புக் கோயிற்பற்றைச் சேர்ந்த மதகற்கிராமத்திற் பிறந்தவர். இவருடைய தந்தையார் பெயர் சுப்பிரமணயம் எனவும், தயார் பெயர் சிதம்பரம் எனவும் கூறுவர். கண்டியரசன் மீது கிள்ளைவிடு தூது பாடிய மாதகல் சிற்றம்பலப்புலவரின், சகோதரியார் புதல்வரே மயில்வாகனப் புலவர். இவர்…
மேலும் வாசிக்க..
வரதபண்டிதர் காசியிலிருந்து வந்து யாழ்ப்பாண நாட்டிலே சுன்னாகம் என்னும் ஊரில் வசித்த வேதியர் குலத்தில் பிறந்தவர். ஏறக்குறைய 1700ம் வருடங்களின் ஆரம்ப காலங்களில் இருந்தவர். தமிழில் இலக்கிய இலக்கணங்களும், சோதிடமும் வைத்தியமும் கற்று பாண்டித்தியம் பெற்றவர். வேதாந்த சித்தாந்த நூல்களும் நன்கு…
மேலும் வாசிக்க..