"சின்னத்தம்பிப் புலவர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

பறாளை விநாயகர் பள்ளு

பறாளை விநாயகர் பள்ளு நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் செய்த மற்றொரு நூலாகும். இது சுழிபுரத்திலுள்ள பறாளாய் என்னுந் தலத்தில் ஏழுந்தருளியிருக்கும் விநாயகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட பள்ளுப்பிரபந்தமாகும். இத்தகைய நூல்களின் இலக்கணத்துக்கமைய மூத்த பள்ளி, இளைய பள்ளி, பள்ளன், பண்ணைக்காரன்…

மேலும் வாசிக்க..

கரவை வேலன் கோவை

கரவை வேலன் கோவை கரவெட்டி வேலாயுத பிள்ளையை பாட்டுடைத்தலைவனாக கொண்டு செய்யப்பட்ட அகப்பொருட் கோவை நூலாகும். யாழ்ப்பாண நகரிலிருந்து பருத்தித்துறை செல்லும்வீதியில் 17 கட்டை தூரத்திலுள்ளது கரவெட்டி எனும் கிராமம். அங்கு வாழ்ந்த பிரபுவாய சேதுநிலையிட்ட மாப்பாண முதலியார் மகன் வேலாயுதபிள்ளையின்…

மேலும் வாசிக்க..

மறைசையந்தாதி

மறைசையந்தாதி திருமறைக்காடெனப்படும் வேதாரணியத்திற் கோயில் கொண்ட வேதாரணியேசுவரர் மீது நல்லூர் சின்னத்தம்பிப்புலவரால் பாடப்பெற்ற நூற்றந்தாதி நூலாகும். இது கட்டளைக்கலித்துறை யாப்பினால் செய்யப்பட்ட திரிபந்தாதியாக விளங்குகின்றது. திருமறைக்காடாரை புகழ்ந்தும், அவரை வணங்கி மக்கள் ஈடேற்றமடையலாம் என்ற பொருளிலும் இதன் செய்யுள்கள் அமைந்துள்ளன. அகப்பொருட்டுறை…

மேலும் வாசிக்க..

கல்வளையந்தாதி

கல்வளையந்தாதி யாழ்ப்பாணத்துச் சண்டிலிப்பாயிலுள்ள கல்வளைப் பதியில் எழுந்தருளிய விநாயகப்பெருமான் மீது பாடப்பெற்ற அந்தாதி நூலாகும். இது நூற்றந்தாதி இலக்கணத்துக்கமைய நூறு செய்யுள்களைக்கொண்டு விளங்குகின்றது. கட்டளைக்கலித்துறை யாப்பிலமைந்துள்ள இச் செய்யுள்கள், யமக அந்தாதியாக விளங்கும். கல்வளைப் பிள்ளையாரை இந்நூல் கற்பகப் பிள்ளையாரென்றும், வலவை…

மேலும் வாசிக்க..

சின்னத்தம்பிப் புலவர்

இப்புலவர் பெருந்தகையார் ஏறக்குறைய 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நல்லூரிலிருந்தவரும், ஒல்லாந்த அரசினால் தேசவளமை என்னும் நூலைத் திருத்தி அமைக்கும் வண்ணம் நியமிக்கப்பட்ட அறிஞர்களுள் ஒருவராய் விளங்கியவரும், பெரும் பிரபுவுமாகிய வில்லவராய முதலியாருடைய அருந்தவப் புதல்வர். இவர் யாரிடத்தில் கல்வி கற்றனர் என்பது…

மேலும் வாசிக்க..