"குமாரசுவாமிப் புலவர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

சாணாக்கிய சதகம்

வடமொழிக்கணுள்ள “சாணாக்கிய சதகம்” என்னும் நீதிநூலை வடமொழி வல்லார் பலரும் அறிவார். அது சாணாக்கியர் என்னும் பெயருடைய பண்டிதர் செய்தது. சாணாக்கியராவார் மகததேசராசனாயிருந்த சந்திரகுப்தனுக்கு மந்திரியாயிருந்த ஒரு சந்நியாசி என்று சிலர் கூறுவர். அந்நூலிலே பலவகையான நீதிசாரங்களும் வருகின்றன. அவற்றுள்ளே பல…

மேலும் வாசிக்க..

மாணிக்கத்தியாகராசப் பண்டிதர்

யாழ்ப்பாணத்து உடுவிற் சின்னப்பு வள்ளியம்மை தம்பதியர்க்கு 1877ம் வருடம் பங்குனி மாதம் மாணிக்கத்தியகராசா பிறந்தார். ஆரம்பக்கல்வியை தன் தாய்மாமனிடம் பெற்ற பிள்ளை மேலே கற்கச் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடம் அனுப்பி வைக்கப்பட்டார். தனிப்பட்ட முறையிற் புலவரிடங் கற்ற இவர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்களால்…

மேலும் வாசிக்க..

பஞ்சவிஞ்சதி விக்கிரகம்

அவ்வப்பொழுது சிவபிரானால் ஆன்மாக்களை இரட்சித்தற்பொருட்டு கொள்ளப்பட்டதாய், மகேசுர பேதங்களாயுள்ள சந்திரசேகரமூர்த்தி முதலிய மூர்த்தங்கள் பஞ்ச விஞ்சதி விக்கிரகங்களாம். பஞ்சவிஞ்சதி – இருபத்தைந்து, விக்கிரகம் – மூர்த்தம். அவை, இலிங்கோற்பவமூர்த்தி, சுகாசனமூர்த்தி, உமாசகர், அர்த்தநாரீசுவரர், சோமாஸ்கந்தர், சக்கரப்பிரதமூர்த்தி, ஶ்ரீமூர்த்தி, அர்த்தாங்கவிட்டுணு, தக்கிணாமூர்த்தி, பிச்சாடந…

மேலும் வாசிக்க..

வாக்கியத்தொடைநோக்கு

வாக்கியத் தொடைநோக்காவது வாக்கியந் தொடுத்தற்சிறப்பு. வாக்கியமாவது செய்யுள் வடிவின் வேறாகச் செய்யப்படும் சொற்களின் கூட்டம். பொருட்குந் தனக்குமுள்ள சம்பந்தமாகிய வலியுடையதே சொல்லெனப்படும். வாக்கியம், கத்தியம், வசனம், சொற்றொடர் என்பன ஒருபொருட்கிளவிகள் என்பர். வாக்கியம் என்று வரையப்படுவனவெல்லாம் அவாய்நிலையும், இயைபும், அண்மையும் உடையனவாயிருத்தல்…

மேலும் வாசிக்க..

தமிழ்ப்புலவர் சரித்திரம்

தமிழ் மொழியினுள்ள இலக்கியலக்கணங்களை கலக்கமறக் கற்றுத் தெளிந்த மெய்யுணர்வும், பிரபந்தஞ்செய்யும் பெருவலியுமுடைய புலவர்களின் சரித்திரங்களை விளம்புகின்ற நூலே தமிழப்புலவர் சரித்திரம் எனும் இந்நூல். யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலை தலைமையுபாத்தியாயராக விருந்த சுன்னாகம் அ. குமாரசாமிப்புலவர் அவர்கள் 1916ம் வருடம் இதனை…

மேலும் வாசிக்க..

திருஞானசம்பந்தப்பிள்ளை

யாழ்ப்பாணத்து நல்லூரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் திருஞானசம்பந்தப்பிள்ளை. ஆறுமுக நாவலரிடத்தும் அவரது மருகர் பொன்னம்பலபிள்ளையிடத்தும் மாணவராக இருந்தவர். இலக்கிய லக்கணமும். தருக்க நூலுஞ் சித்தாந்த சாத்திரமுங் கற்றவர். தர்க்கசாத்திரவாராய்ச்சியிலும், தர்க்கவாதஞ் செய்தலிலும் மிக்க வேட்கையுடையவர். இதனால் தர்க்ககுடாரதாலுதாரி என அழைக்கப்பட்டவர். திருஞானசம்பந்தப்பிள்ளை…

மேலும் வாசிக்க..

முருகேச பண்டிதர்

யாழ்ப்பாணத்து சுன்னாகத்தில் வேளாளர் குலத்தில் பூதத்தம்பிக்கு மகனாக 1839ம் வருடம் பிறந்தவர் முருகேச பண்டிதர். ஆண்டு விகாரிவரு மாவணிமூ வேழு செவ்வாய் மாண்ட முதற்பிரத மைத்திதிமார்த் – தாண்டனான் மூடுபெருங் கீர்த்தி முருகேச பண்டிதனார் நாடுங் கதிக்குரிய நாள். முருகேச பண்டிதர்…

மேலும் வாசிக்க..

முத்துக்குமார கவிராசர்

முத்துக்குமார கவிராசர் உடுவில் அம்பலவாணருக்கும் அவர் துணைவி சிங்க விதானையார் மகளுக்கும் புத்திரராய் பிறந்தார். இவர் சுப்பிரமணியருக்குப் பௌத்திரர், சந்திரசேகரமாப்பாணருக்குப் பிரபவுத்திரர்1. சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரின் தாதன்றைக்கு2 சிரேட்டர்3. ஆங்கில திராவிட பண்டிதராயிருந்த சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களின் தமிழாசிரியர்….

மேலும் வாசிக்க..

யாழ்ப்பாணம் சுவாமிநாத பண்டிதர்

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் சின்னத்தம்பி என்பாருக்கு மகனாக பிறந்தவர் சுவாமிநாத பண்டிதர். உரிய காலத்தே வித்தியாரம்பம் செய்யப்பட்டு, வண்ணார்பண்ணையிலிருந்த பாடசாலை ஒன்றில் அரம்பக் கல்வியனை கற்று வந்தார். இளமைக்காலத்தே இவர் இலக்கண இலக்கணங்களை வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளையிடத்தே கற்க விரும்பினார். வித்துவசிரோமணி அவர்கள் வண்ணார்பண்ணையிலிருந்த…

மேலும் வாசிக்க..

நகுலேச்சர விநோத விசித்திர கவிப்பூங்கொத்து

சிறந்த சொல்லாங்காரம் மிக்க கவிதைகள் புனைய வல்வவரும் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரிடத்தே கல்வி கற்றவரும் மயிலை மும்மணிமாலை, மயிலைச் சுப்பிரமணியர் விருத்தம், மாவைப் பதிகம் என்பனவற்றை செய்தவருமாகிய மயிலிட்டியில் வசித்த க. மயில்வாகனப் புலவரினால் நகுலேச்சுவரப் பெருமான் மீது செய்யப்பட்டதே இந்த…

மேலும் வாசிக்க..

சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர்

யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் அம்பலவாண பிள்ளைக்கும் சிதம்பரவம்மையாருக்கும், இரண்டாவது மகவாகச் சாலிவாகன சகாப்தம் 1775க்குச் சமமான பிரமாதீச வருடம் தை மாதம் 18ம் நாள் (கிறீஸ்து வருடம் 1855) இல் சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் தோன்றினார். இவரது சகோதரிகள் சிவகாமியம்மையும், காமாட்சியம்மையும் ஆவார்கள். முத்துக்குமாரக்…

மேலும் வாசிக்க..