"கதிரவேற்பிள்ளை" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

கதிர்காமக் கலம்பகம்

சிவபூமியாம் ஈழத்தின் கதிர்காமத்திருப்பதியில் எழுந்தருளியருள் பாலிக்கின்ற முருகப்பெருமான் மீது கந்தப்பசுவாமிகள் பாடிய பிரபந்தமே கதிர்காமக்கலம்பகம். இக்கலம்பகத்தை பாடிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த கந்தப்ப சுவாமிகள் கொடுநோய் வந்து தன்னை வாட்டியபோது பல சிவ குக தீர்த்தங்களுக்கும் சென்று வழிபட்டும் நோய்தீராமையினால், கதிர்காமம் சென்று…

மேலும் வாசிக்க..

கந்தபுராண சாரம்

யாழ்ப்பாணம் நா. கதிரவேற்பிள்ளை அவர்களினால் கந்தபுராணத்தினை சுருக்கி இருபானெண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தங்களால் செய்யப்பெற்றதே இக் கந்தபுராண சாரமாம். கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் பொதுவாக ஆறு சீர், ஏழு சீர் அல்லது எண் சீர் கொண்டு அமைந்திருப்பினும், இவ்விருத்தங்கள் ஒவ்வொன்றும் இருபத்தெட்டு…

மேலும் வாசிக்க..

சைவசித்தாந்த சங்கிரகம்

செந்தமிழ் மொழியிலே மெய்கண்ட சாத்திரங்களாம் திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞானபோதம், சிவஞானசித்தியார், இருபாவிருபது, உண்மைவிளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், போற்றிப் பஃறொடை, வினாவெண்பா, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் ஆகிய பதினான்கும் ஆகமங்கள் போன்றும், அவற்றிற்கு புடைநூலாக தசகாரிய முதலிய பண்டார…

மேலும் வாசிக்க..

சிவசேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம்

யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி நா. கதிரைவேற்பிள்ளை அவர்கள் வேதாந்தத் தெளிவுண்மைப் பொருளை உணர்த்தும் சைவ சித்தாந்த சமயத்தினூடு சிவபிரான் திருவடியை இப்பூவிலகிலுள்ளோர் இலகுவில் உணர்ந்து ஈடறே எண்ணி இந்நூலை படைத்துள்ளார்கள். இதனையே சிறப்புப்பாயிரம் பின்வருமாறு கூறுகிறது. உலகனைத்தும்படைத்தளிக்குமொருமுதல்வன்றனையுயிர்களுணர்ந்தீடேற இலகுசிவசேத்திராலயமகோற்சவமெனுநூலினைதமைத்து நிலவவரையாவெழுத்திற்பதித்துநெடுந்தயையினோடுமெவர்க்குமீந்தா னலகில்புகழவன்புரிந்தபேருதவிக்கிணையுளதோவவனிமீதே இந்நூல்…

மேலும் வாசிக்க..

கருவூர் மான்மியம்

ஆரணிநகர சமஸ்தான வித்துவானும், மாயாவாத தும்சகோளரி என பெயர் பெற்றவருமான யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி மகாவித்துவான் நா. கதிரவேற்பிள்ளை அவர்கள் தென்னிந்தியாவின் கொங்கு நாட்டிலே அமைந்து சிறந்திருக்கும் சிவத்தலமாகிய திருக்கருவூர் தலச்சிறப்பை சொல்லி செய்த நூலே கருவூர் மான்மியம் என வழங்கும் நூலாகும்….

மேலும் வாசிக்க..

சைவபூஷண சந்திரிகை

ஆரணி நகர் சமஸ்தான வித்துவானாயிருந்த “மாயாவாத தும்சகோளரி” யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி நா. கதிரவேற்பிள்ளை அவர்கள் இயற்றப்பட்டு, பரம ஐசுவரியங்களான விபூதி ருத்திராக்கங்களின் இலக்கணங்களையெல்லாம் இனிது விளங்கத்தெரிவிக்கும் நூலே சைவபூஷண சந்திரிகை என்கின்ற இந்நூல். செந்தமிழ்நன் மாதே சிவனொளிருஞ் சித்தாந்த வந்தமிலா மெய்ந்நிலையே…

மேலும் வாசிக்க..

சுவாமிநாத பண்டிதர்

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் சின்னத்தம்பி என்பாருக்கு மகனாக பிறந்தவர் சுவாமிநாத பண்டிதர். உரிய காலத்தே வித்தியாரம்பம் செய்யப்பட்டு, வண்ணார்பண்ணையிலிருந்த பாடசாலை ஒன்றில் அரம்பக் கல்வியனை கற்று வந்தார். இளமைக்காலத்தே இவர் இலக்கண இலக்கணங்களை வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளையிடத்தே கற்க விரும்பினார். வித்துவசிரோமணி அவர்கள் வண்ணார்பண்ணையிலிருந்த…

மேலும் வாசிக்க..

புலோலி நா. கதிரவேற்பிள்ளை

யாழ்ப்பாணத்து புலோலியிலே சைவாசாரத்திற் சிறந்த நாகப்பிள்ளை என்பாருக்கு 1871இல் மகனாகப் பிறந்தவர்தான் கதிரவேற்பிள்ளை. இளமையிலேயே சுறுசுறுப்பு மிக்கவராயும் ஞாபகசக்தி மிகுந்தவராக காணப்பட்டார் இவர். வித்தியாரம்பம் செய்யப்பட்ட பின்னர் ஊரிலிருந்த ஒரு பாடசாலையிலே கல்வியினைத் தொடர்ந்தார் கதிரவேற்பிள்ளை. இருப்பினும் வறுமையின் காரணமாய் தொடர்ந்து…

மேலும் வாசிக்க..