Menu

"ஆறுமுக நாவலர்" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

புலோலி பர்வதவர்த்தினி சமேத பசுபதீஸ்வரர் ஆலயம்

வடமராட்சியின் புலோலி மண்ணில் பர்வதவர்த்தினி சமேதராக கோயில்கொண்டு அருள்பாலிக்கின்றார் பசுபதீஸ்வர சிவபெருமான். இவ்வாலயத்தை பருத்தித்துறைச் சிவன் கோயில் என அழைப்பாருமுளர். இவ்வாலய வரலாறு வாய்மொழிக் கதையாகவே உள்ளது. 18ம் நூற்றாண்டின் பிற்கூற்றில் தென்னிந்தியாவிலிருந்து புலோலி வந்தடைந்த சுவாமியார் ஒருவர் ஆலயம் இருக்குமிடத்திலிருக்கம்…

மேலும் வாசிக்க..

சற்குருமணிமாலை

சித்தன்கேணி அம்பலவாண நாவலர் அவர்கள் ஆறுமுக நாவலர் மீது பேரன்பு கொண்டவர், அவரை தனது மானசீக குருவாக கொண்டவர். ஆறுமுக நாவலர் வழியில் பிரமச்சாரிய விரதம் பூண்டு தமிழையும் சைவத்தையும் வளர்க்க தன் வாழ்நாளை, தாமீட்டிய பொருளனைத்தையும் செலவிட்டவர். ஆறுமுக நாவலர்…

மேலும் வாசிக்க..

சிதம்பர மான்மியம்

சிவபெருமான் திருக்கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் திருத்தலங்கள் எல்லாவற்றிற்கும் முதன்மையாக வைத்துக் கூறப்படும் சிதம்பரம் மிகத் தொன்மையும் தெய்வீகத்தன்மையும் பொருந்தியது. தரிசித்தால் முத்தி சித்திக்கும் தலமாக விளங்கும் பெருமை வாய்ந்தது. இத்தலம் மூவர் தேவாரத் திருப்பதிகங்களையும் கொண்டுள்ளது. மாணிக்கவாசகராலும், திருமாளிகைத்தேவர், சேந்தனார் ஆகிய திருவிசைப்பா…

மேலும் வாசிக்க..

ஆறுமுகநாவலர் சரித்திரம்

சைவமும் தமிழும் வளர்த்த நல்லை நகர் ஆறுமுக நாவலர் அவர்களின் மறைவுக்கு பின்னர், அவரது வாழ்க்கை வரலாற்றினை தொகுத்து, அவரது சீடர்களில் ஒருவரான கனகரத்தின் உபாத்தியாயர் கத்திய ரூபமாக யாத்து 1882ம் வருடம் வெளியிட்ட நூலே ஆறுமுகநாவலர் சரித்திரமாகும். ஆறுமுகநாவலரின் வரலாறு…

மேலும் வாசிக்க..

வாக்கியத்தொடைநோக்கு

வாக்கியத் தொடைநோக்காவது வாக்கியந் தொடுத்தற்சிறப்பு. வாக்கியமாவது செய்யுள் வடிவின் வேறாகச் செய்யப்படும் சொற்களின் கூட்டம். பொருட்குந் தனக்குமுள்ள சம்பந்தமாகிய வலியுடையதே சொல்லெனப்படும். வாக்கியம், கத்தியம், வசனம், சொற்றொடர் என்பன ஒருபொருட்கிளவிகள் என்பர். வாக்கியம் என்று வரையப்படுவனவெல்லாம் அவாய்நிலையும், இயைபும், அண்மையும் உடையனவாயிருத்தல்…

மேலும் வாசிக்க..

திருஞானசம்பந்த உபாத்தியாயர்

யாழ்ப்பாணத்து சுழிபுரத்தில் செல்வநாயகச் செட்டியார் குலத்தில் பிறந்தவர் திருஞானசம்பந்த உபாத்தியாயர். மணமுடித்த பின்னர் யாழ்ப்பாணத்து திருநெல்வேலியில் வாழ்ந்தவர். ஆறுமுக நாவலரிடத்தே மாணாக்கனாக இருந்தவர். கந்தபுராணம், பெரியபுராணம், பாரதம் முதலிய இலக்கியங்களை நன்கு கற்றவர். பலருக்கும் கற்பித்தவர் என்பதனாலே உபாத்தியாயர் எனப் பெயர்…

மேலும் வாசிக்க..

ஆறுமுகநாவலர் பிரபந்தத்திரட்டு

சைவமும் தமிழும் வளர்த்த ஆறுமுக நாவலர் அவர்கள் சிவபதமெய்திய பின்னர், அவர் எழுதிய நூல்களையும், கண்டன பிரசுரங்களையும் மற்றும் பிறவற்றையும் தொகுத்து அவரது மருகனார் த. கைலாசபிள்ளை அவர்கள் இரண்டு பாகங்களாக வெளியிட்ட நூலே ஆறுமுகநாவலர் பிரபந்தத்திரட்டு. இந்நூலில் ஆறுமுகநாவல் செய்த…

மேலும் வாசிக்க..

கொக்குவில் சபாரத்தின முதலியார்

யாழ்ப்பாணம் கொக்குவிற் பதியில் முல்லைத்தீவிலே எழுதுவினைஞராக பணியாற்றி வந்த சபாபதிப்பிள்ளை என்பாருக்கும் அவரது துணைவியார் ஆச்சிமுத்துவிற்கும் 1858ம் ஆண்டு சித்திரை மாதம் மூன்றாம் நாள் பிறந்தவர்தான் சபாரத்தின முதலியார். ஆரம்பக் கல்வியை சூழலில் நிறைவு செய்து கொண்டு, அக்காலத்தில் வாழ்ந்த சிறந்த…

மேலும் வாசிக்க..

அம்பலவாண நாவலர்

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சித்தன்கேணி என்னும் ஊரில் ஆறுமுகம்பிள்ளை சுந்தரவல்லி தம்பதியருக்கு புதல்வராக 1855இல் பிறந்தவர்தான் அம்பலவாணநாவலர். ஐந்தாவது வயதில் சங்கானை வேற்பிள்ளை ஆசிரியர் அவர்கள் அம்பலவாண நாவலருக்கு வித்தியாரம்பஞ் செய்து வைத்தார்கள். தொடர்ந்து அவர் மட்டுவில் வேற்பிள்ளையிடம் இலக்கண இலக்கியங்களையும்,…

மேலும் வாசிக்க..

பத்திராதிபர் சரவணமுத்துப்பிள்ளை

யாழ்ப்பாணம் சங்கானையை பிறந்த ஊராகவும் ஊரெழுவை வாழந்த இடமாகவும் கொண்ட சைவவேளான் குல திலகர் சுப்பிரமணியபிள்ளைக்கு 1848ம் ஆண்டு மைந்தனாக பிறந்தவர் சரவணமுத்துப்பிள்ளை. இவர் பிற்காலத்தில் சரவணமுத்துப் புலவர் என அழைக்கப்பட்டார். இளமையிற் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த தமிழிலக்கியப் புலவராகிய சிவஸ்ரீ கதிர்காமையரிடம்…

மேலும் வாசிக்க..

நீர்வேலி சங்கர பண்டிதர்

சங்கர பண்டிதர் யாழ்ப்பாணம் உடுவில் கோவில்பற்றைச்சேர்ந்த சுன்னாகத்தில் வேளாளர் மரபில், விரோதி வருடம் (1829) சித்திரை மாதம் 21ம் திகதி பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் சிவகுருநாதர் மற்றும் தெய்வயானை அம்மையார். யாழ்ப்பாணம் நீர்வேலியிலே வசித்து வந்த இவர் கந்தரோடையிலிருந்த அப்பாப்பிள்ளை…

மேலும் வாசிக்க..

ஆறுமுக நாவலர்

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் யாழ்ப்பாணத்து நல்லூரிலே கார்காத்த வேளாளர் மரபில், பாண்டி மழவர் குடியில், சலிவாகன சகாப்தம் 1745 இற்கு சரியான கி.பி 1822ம் வருடம் மார்கழி மாதத்திலே பிறந்தவர். இவர் தந்தையார் கந்தப்பிள்ளை, தாயார் சிவகாமியார். இவரது ஆறாவது…

மேலும் வாசிக்க..

பிரம்மஸ்ரீ செந்திநாதையர்

சிவபூமி எனப்படுகின்ற இலங்கைக்கு சிரசாய் விளங்குவது யாழ்ப்பாணம். இவ் யாழ்ப்பாணத்தே அமைந்து சிறப்பது குப்பிழான் எனும் கிராமம். இந்த கிராமத்திலே சிவபூஜாதுரந்தரராகிய பிரம்மஸ்ரீ சிந்நயஐயர் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இவர்களது மனைவியார் பெயர் கவுரியம்மையார். இவர்களுக்கு புதல்வர்கள் மூவர், புதல்வி ஒருத்தி….

மேலும் வாசிக்க..

சி. வை. தாமோதரம்பிள்ளை

இராவ்பஹதூர் சி. வை. தாமோதரம்பிள்ளையவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள சிறுப்பிட்டி என்னுங் கிராமத்திலே வைரவநாதபிள்ளை என்பாருக்கும், அவர் பத்தினியாராகிய பெருந்தேவி என்பாருக்கும் சிரேட்ட புத்திரராய் 1832 செப்டெம்பர் 12 இலே பிறந்தார்கள். சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள், பாடசாலைப் பரிசோதகராயிருந்த தமது தந்தையாரிடமே உரிய…

மேலும் வாசிக்க..