Menu

"அளவெட்டி" எனக்குறிப்பிடப்பட்டுள்ள ஆக்கங்கள்

அளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம்

புண்ணிய பூமியாகிய யாழ்ப்பணத்தின் வடபாகத்தில் அமைந்து சிறக்கின்ற அளவெட்டிக் கிராமத்தின் தென்பால், வயற்கரை ஓரத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கின்றாள் முத்துமாரியம்மை. இவ்வாலயம் 250 வருடங்களுக்கு மேலும் பழமையானது. பல சுவையான வரலாறுகளை கொண்டது. நோய்நீக்கி பேய்நீக்கி அன்பர்களுக்கு இஸ்ட சித்திகளை கொடுக்கும்…

மேலும் வாசிக்க..

நாதஸ்வர வித்துவான் நா. க. பத்மநாதன்

யாழ்ப்பாணத்து அளவெட்டியில் 1931ம் ஆண்டு பிறந்தவர் பத்நாதன். தன் ஏழாவது வயதினிலேயே இசைத்துறைக்குள் நுழைந்த இவர் முதற்குரு அவரது தந்தையார் நாதஸ்வர வித்துவான் நா. கந்தசாமி அவர்கள். எந்தக் கலையாயிருந்தாலும், முதலில் தாளத்திலே பயிற்சியும் தேர்ச்சியும் அடைய வேண்டும் என்பது தந்தையாரின்…

மேலும் வாசிக்க..

தவில் மேதை தட்சணாமூர்த்தி

இணுவிலில் பிறந்து அளவையூரிலே வாழ்ந்த ஈடு இணையற்ற தவில்மேதை “லயஞான குபேர பூபதி” தட்சணாமூர்த்தி அவர்கள் யாழ்ப்பாணத்து வாத்தியக் கலைஞர்களுள்ளே சிறப்பான இடத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள். இவர் இணுவிலில் வாழ்ந்த பிரபல இசை விற்பன்னரான விசுவலிங்கத்திற்கு அவரது துணைவியார் இரத்தினம் அவர்கட்கும்…

மேலும் வாசிக்க..

அளவெட்டி குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயம்

அளவெட்டி, தெல்லிப்பழை, மல்லாகம் ஆகிய மூன்று கிராமங்களும் இணையும் எல்லைப்பகுதியில் அமைந்து சிறக்கின்றது கணேஸ்வரம் என அழைக்கப்படுகின்ற குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயம். இவ்விநாயகர் ஆலயத்தின் வரலாறு மிகத்தொன்மையானது. பதினான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த சம்பந்த ஞானியார் என்கின்ற துறவி இவ்வாலயச்…

மேலும் வாசிக்க..

அளவெட்டி பெருமாக்கடவை விநாயகர் ஆலயம்

யாழ்ப்பாணத்தின் பெருமைமிகு கிராமங்களிலே ஒன்றான அளவெட்டிக் கிராமத்தினிலே அமைந்து சிறக்கும் பெருமைமிகு ஆலயக்களிலே பெருமாக்கடவை விநாயகர் ஆலயமும் ஒன்றாம். மல்லாகம், சுன்னாகம் மற்றும் கந்தரோடை கிராமங்களை தொட்டு நிற்கும் அழகிய வயற்பரப்பின் மத்தியிலே அமைந்திருக்கின்றது இவ்வாலயம். ஆலயத்தின் முன்னே புராதனமான ஒரு…

மேலும் வாசிக்க..

அளவெட்டி அருணோதயக் கல்லூரி

அளவெட்டி மண்ணில் அமைந்திருந்து கல்விப்பசி ஆற்றும் அருணோதயக் கல்லூரி ஒரு கிடுகுக்கொட்டிலிலே 1894ம் ஆண்டு திரு. நாகமுத்து அருணாசலவுடையாரால் ஆரம்பிக்கப்பட்டது. நூறாண்டுகளைத் தாண்டி பயணிக்கும் இக்கல்லூரியின் வரலாறு ஆலமரமென இன்று பெருவுருவெடுத்து நிற்கின்றது. இக்கல்லூரியின் ஆரம்பகால முதன்மையாசிரியராயிருந்தவர், திரு. மு. செல்லப்பாச்சட்டம்பியார்…

மேலும் வாசிக்க..

அளவெட்டி கும்பழாவளை பிள்ளையார் கோயில்

அளவெட்டி கும்பழாவளை பிள்ளையார் ஆலய வரலாற்றை அறிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்.

மேலும் வாசிக்க..

அழகொல்லை விநாயகர் ஆலயம்

மேலும் வாசிக்க..

அளவெட்டி கும்பழாவளைப்பிள்ளையார் கோயில்

பூர்வீகத்தால் மாருதப்புரவீகவல்லி எனும் பெயருடைய சோழ அரசிளங்குமரி குதிரை முகமுடையவளாகக் குஷ்டரோக வாய்ப்பட்டமையால் அக்குதிரை முகமும் குஷ்டரோகமும் நீக்குவதற்குப் பற்பல சிகிச்சைகள் மேற்கொண்டும் தெய்வ வழிபாடுகள் ஆற்றியும் நோய் தீராமை கண்டு தவசிரேஷ்டர் ஒருவரின் வாக்குப்படி வட இலங்கையை அடைந்தாள். யாழ்ப்பாணத்தில்…

மேலும் வாசிக்க..

அளவெட்டி அழகொல்லை விநாயகர் ஆலயம்

இந்துமா சமுத்திரத்தின் முத்தென விளங்கும் இலங்கையின் வடபாகத்தே அமைந்தது யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத்தின் வடபால் கலைவளம், பொருள்வளம், நீர்வளம் என தெய்வீக மணம் செறிந்து விளங்குவது அளவெட்டி என்னும் கவினுறு கிராமம். இங்கு பல புகழ்பெற்ற ஆலயங்கள் நிறைந்து விளங்குகின்றன. இவ்வளவெட்டி கிராமத்தின்…

மேலும் வாசிக்க..

அளவெட்டி தவளக்கிரி முத்துமாரி அம்மன் கோயில்

இவ்வீழ நாட்டில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடபால் அளவெட்டி என்னும் அரிய புகழ் படைத்த ஊர் அமைந்துள்ளது. நகுலேஸ்வரத்திற்கு நேர்தெற்கே இரண்டு கல் தொலைவில், தெல்லிப்பளை பண்டைத்தரிப்பு வீதியில் அளவையூரின் அமைதிமிகு சூழலில், ஓமெனும் மந்திரத்துட் பொருளாயிருக்கும் உலகத்து நாயகி அன்னை முத்துமாரி…

மேலும் வாசிக்க..

சீனன்கலட்டி ஞானோதய வித்தியாசாலை

அளவெட்டி பழம் பெரும் சான்றோர்களைக் கொண்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் சிற்றூர் தோறும் கல்விச்சாலைகளை நிறுவிய காலம் அது. ஆறுமுகநாவலரின் வேணவா இந்த உணர்ச்சி உச்சக்கட்டத்தை அடைந்த காலத்தில் நம்மூர்ச் சான்றோர்களான வைத்தியர் த.தாமோதரம்பிள்ளை அவர்களது காணியில் சமூக சேவையாளர்களான சரணமுத்து…

மேலும் வாசிக்க..