ஸ்கந்தவரோதயா கல்லூரி

ழம்பெருமை வாய்ந்த யாழ்ப்பாணத்து கந்தரோடை கிராமத்தில் வந்துதித்த பெரியார் கந்தையா உபாத்தியாயரினாலே 1894ம் வருடம் தாபிக்கப்பட்டது ஸ்கந்தவரோதயா கல்லூரி. தாபிக்கப்பட்ட காலத்தே முகாமையாளர்களாக அமர்ந்திருந்து இப்பாடசாலையினை வளர்த்த பெருமை திரு சீனிவாசகம் மற்றும் நாகநாதன் என்போரைச் சாரும்.

1944ம் வருடம் வரை இலண்டன் மெட்ரிக்குலேஷன் பரீட்சைக்காக மாணவர்களை தயார்செய்து வந்த இக்கல்லூரியின் அதிபர்களாக திரு பொன்னையா (1900-1914), திரு இளையதம்பி (1912-1917 – 1924-1931), திரு சபாபதிப்பிள்ளை (1917-1924), திரு முத்துக்குமாரு (1931-1938), திரு சீனிவாசன் (1938-1943), திரு சிவபாதசுந்தரம் (1943-1944) ஆகியோர் பெரும்பணியாற்றினர்.

skanda-logo1944ம் ஆண்டிலிருந்து 1962 வரையான 18 ஆண்டுகள் இக்கல்லூரியின் பொற்காலம் எனச் சொல்லப்படக்கூடிய காலப்பகுதி. இப்பாடசாலையின் பெருமையும் புகழும் திக்கெட்டும் பரிவிய காலம். திரு. C. சுப்பிரமணியம், வைத்திய கலாநிதி சுப்பிரமணியம் மற்றும் சிவசுப்பிரமணியம் ஆகியோரின் கூட்டு முயற்சியினால் பாடசாலை விசேட தரத்திற்கு உயர்ந்தது. இக்காலப்பகுதியில் இப்பாடசாலையிலிருந்து பெருமளவிலான மாணவர்கள் விஞ்ஞான பீடத்திற்கு தெரிவாகிச் சென்றனர். கல்வி மற்றும் விளையாட்டுத்துறையில் இலங்கையில் சிறந்ததொரு கல்லூரியாய் ஸ்கந்தவரோதயா திகழ்ந்தது.

1969 வரையில் திரு சிவசுப்பிரமணியத்தின் தலைமையின் கீழ் பாடசாலை மேலும் வளர்ச்சியுற்றது. 1969 இலிருந்து 1997 வரை திரு. சிவகுமாரன், திரு. ஏகாம்பரம், திரு. சச்சிதானந்தம், திரு. தியாகராசா, திரு. நாகரத்தினம், திரு. இராசவளவன், திரு. பொன்னம்பலம், திரு. விக்னேஸ்வரன் மற்றும் திரு. கமலநாதன் ஆகிய அதிபர்களின் தன்னலமற்ற சேவையினால் பாடசலை மேலும் வளர்ச்சியுற்றது.

1998ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டுவரை அதிபராக இருந்த திரு சிவாஜி அவர்களுடைய காலத்தில் பாடசாலை பல உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றதோடு, பல மாணவர்கள் கலைப்பீடத்திற்கு தெரிவாகினார்கள். ஆரம்பப்ப பாடசாலை உருவாக்ப்பட்டதும், பாடசாலையினுள் முருகன் ஆலயம் அமைக்கப்பட்டதும் இக்காலத்திலேயே. காலாச்சார விழுமியங்களை பேணிப்பாதுகாக்கக்கூடிய ஒரு மாணவர் சமுதாயத்தை உருவாக்குவதில் இப்பாடசாலை இக்காலத்தில் முன்னின்றது.

இவர்கள் பின் அதிபராகிய திரு. ஆறுதிருமுருகன் மற்றும் திரு ஈஸ்வரதாசன் காலத்தில், பாடசாலை தொடர்ச்சியாக கந்தரோடை கிராமத்திற்கு மட்டுமென்றல்லாது சூழவுள்ள அனைத்து கிராமத்து மாணவர்களும் கல்விப்பசியாற்றி வருகின்றது.

பாடசாலை தாபகர் கந்தையா உபாத்தியாயர்

பாடசாலை தாபகர் கந்தையா உபாத்தியாயர்