சோமாஸ்கந்தக் கல்லூரி

சைவமும் தமிழும் சிறப்புற அமையவேண்டும் என்ற அவாவினால் 1931 ம் ஆண்டு சித்திரை மாதம் 22 ம் திகதி மிருகசீரிட நட்சத்திர நன்நாளில் ஸ்ரீ சோமாஸ்கந்தத் தமிழ் சித்தியாலயம், ஸ்ரீ சோமாஸகந்த ஆங்சில வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகள் தற்காலிக இடமொன்றில் மேன்மிகு மழவராயர் கந்தையா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டன. ஆரம்பிக்கும் போது திண்ணைப்பாடசாலையாகவே எமது பாடசாலை இருந்தது.

இலங்கையில் இலவசக்கல்வி அமுலுக்கு வருவதற்கு முன் எமது பாடசாலையில் இலவசக்கல்வி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏழை மாணவர்களிற்கு கல்வி வழங்கும் முகமாக எமது ஸ்தாபகர் மழவராயர் கந்தையா அவர்கள் தமது ஆதனங்களை உயிலாக எழுதியுள்ளார். இவற்றை கையாளும் உரிமை தர்மகர்த்தா சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

1935 ம் ஆண்டு எமது பாடசாலை நிரந்தர இடமாக தற்போது இயங்கும் இடத்துக்கு கொண்டுவரப்பட்டது. 1961 ம் ஆண்டு எமது பாடசாலையை அரசு சுவீகரித்துக்கொண்டது. 1965 ம் ஆண்டு எமது பாடசாலை ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்பொழுது திரு. சுந்தராச்சாரியார் தலைமை ஆசிரியராக இருந்தார்.

2005 ம் ஆண்டு எமது கல்லூரயில் ஆங்கில மொழிமூலகற்கை தரம் 6 இல் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது திரு. இ.இராஜமகேந்திரன் தலைமையில் 61 நிரந்தர ஆசிரியர்களையும் 10 தற்காலிக இணைப்பு ஆசிரியர்களையும், 9 கல்வி சாரா ஊழியர்களையும், 1562 மாணவர்களையும் கொண்டதாக எமது பாடசாலை விளங்குகின்றது.