Menu

கந்தபுராண சாரம்

யாழ்ப்பாணம் நா. கதிரவேற்பிள்ளை அவர்களினால் கந்தபுராணத்தினை சுருக்கி இருபானெண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தங்களால் செய்யப்பெற்றதே இக் கந்தபுராண சாரமாம். கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்கள் பொதுவாக ஆறு சீர், ஏழு சீர் அல்லது எண் சீர் கொண்டு அமைந்திருப்பினும், இவ்விருத்தங்கள் ஒவ்வொன்றும் இருபத்தெட்டு சீர்களை கொண்டிருத்தல் இதன் பெருஞ்சிறப்பாம். உற்பத்திக் காண்டத்திற்கு ஒன்று, அசுர காண்டத்திற்கு ஒன்று, மகேந்திர யுத்த காண்டங்களுக்கு ஒன்று மற்றும் தேவதக்ஷ காண்டத்திற்கு ஒன்றென நான்கு ஆசிரிய விருத்தங்களுக்கு பின்னிணைப்பாய் இன்னிசை வெண்பாவால் அமைந்த முதனூலளவும், நேரிசை வெண்பாவால் அமைந்த முதனூற் சிறப்பும் சொல்லப்பட்டுள்ளன.

உற்பத்திகாண்டம்.

உலகெலா முணர்வரிய முருகனிரு சரணமது வுன்னிவாழ் கச்சி யப்ப
னுபயதிரு வடிபணிந் தருள்வியா தற்சீட னோதுகந் தன்பு ராண
வுட்கிடை யெடுத்தன்பி னோதியிரு மைப்பயனு மோங்கிமிக வாழு வாமா
லும்பர்புகழ் வெள்ளிமலை நம்பரனை யம்மைபெய ரொல்கவிம யக்கு மகளாய்

அலகிலன் பொடுதவ முஞற்றமுனி வர்க்கர னறிக்கவா கமமெய்ஞ் ஞான
மயன்கோ விலேகர்வரை யாய்புவிட மதனேகி யங்கம்வெந் தழிய யோகன்
றகன் றனையி னோன்புகண் டருமணங் கேட்டெவரு மாகவந் தருளின்முற்றி
யநங்க னையெழுப்பிவந் தமரவம ரர்க்காக வறுமுகங் கொண்டு பொறியாற்

சிலம்பாள் சிலம்புதிர வோடவளி துணையாற் செறிந்தபொறி சீர்த்த டத்திற்
சிறுவரறு வோராகி யறுவர்முலை யுண்டாடல் செய்யவிறை கூடு சிவையா
டிரட்டேது விற்கந்த னாகிச்சி லம்புவரு தேவிமார் மக்க டுணையாச்
செறியவொரு தகர்கொண் டயன்சிரங் குட்டியொரு சிறைவைத்தகற்று குருவாய்

இலகுமிரு வல்லியர்க் கருளிவிபு தர்க்காக வெண்ணில்படை பெற்றெழுந்து
வெதிர்வரையு முரவரையு நீற்றவசுரேந்திர னிரங்கியே கிடவி லேக
ரீர்ம்பொறை யிருந்துபுரி பூசிக்க வெண்ணிறல மேன்றுசுர மீண்டு செந்தி
யெழுந் துவரலாறுகேட் டருள் புதுச் சந்நிதிய வென்றனக் கருளை யளியே. (௧)

அசுரகாண்டம்

சுரசைகவி சூழ்ச்சியிற் காசிப னுழைச்சென்று துயருறுத் தொத்தபுணர்விற்
சூரனரி யாம்பன்மா முகனாதி வெள்ளங்க டோற்றிடத் தாதை தவமே
சொல்லரிய வின்பமென் றறிமாணி சரிதையுஞ் சொல்லவனை வீரமகமே
துன்றுவள னென்றகல யாகம தியற்றியே தொல்வரம் பலவடைந்து

கரவிற்ப ளிங்குரை புன் மதமண்ட கோசமுங் கற்றுவிச யத்தில் விசயங்
கண்டெதிர்கொள் பாட்டனோடு வந்தவனி துன்னவே கணர்துதிக் கரியு ருத்ர
கதியர்நிலை கூறநகர் செய்துமுடி சூடிக் களீஇயரசு செய்து புலவோர்
காலாள ராகவரி பகையாதி முளையரைக் கடிதீன மோத்தை முகிகாற்

றுரசைவலன் வாதாவி தோன்றியுறு வர்க்குமை துறுநாளொர் சசியைவௌவச்
சூர்சூழந்த துன்னியே யிந்திரன் மனைவேணு துன்றிவழி பட்டுலரவே
சொல்விந்த மலைவளர முனிவரன் காவிரியொ டுற்றுவரை சூள்வ ழங்கித்
தொட்டழுத் திப்பிலம் போய்க்கொன் றிறுக்கவரி சொல்லிற் கவிழ் க்கந்தியும்

வரசைல மகள் கேள்வனைப்பணிய வேவல்செயும் வானவர் புலம்ப மருதன்
வண்கலை யுறவுன்ன வயிராணி சோகிக்க வையனாட் காவலிற் போய்
வரமுனச முகிபிடித் தொருகையற் றேங்கமுதல் வாணரைச் சிறைபு குத்தி
வருத்தின னெனக்கேட்ட புதுமையுறுசந்நிதிய வந்தருள்வையின் றெனக்கே. (௨)

மகேந்திர யுத்த காண்டங்கள்.

தோள்வீ ரனைத்தூது போக்கமா தனவரை சுழனறழுந் தேறி யுததி
துள்ளியரி கோன்றிலங் கைவீழ்த்தி யதிபலற் றோலையநகர் சென்று கயனுந்
தொல்லுயிர் விடப்பட் டினத்தழகு கண்டரி சுதன்புலம்பக் கனவினிற்
றோன்றியருள் செய்தபின் றேற்றியவை புக்கெமது தோன்றலியல் கூறியுக்ர

ஆளரிய தெனவன் றொருசத முகன்காவ லாளரை வதைத்து நகரை
யாழித்தாயிரித்தோளர் வயிரவா கறுகுமுக னாதியர்க் கொன்று மீள
வந்நகர் புரிந்தமைச் சியல்கொண்டு சமர்செய்ய வாயத்த மாகவாகு
வவன்மொழிந் தனவருள வலைவாய் விடுத்தீழ மதனினே மத்த கூடந்

தாள்கொண்டிருப்பமன் வரவுமுனி கூறலுந் தநயனை விடுக்க முதனாட்
சமர்செய் தொளிக்கவிரு நாட்டந்தை வலிகெடத் தனயன் மூன்றினிலுமாகத்
தனிவாகு நகர்புக் கடர்த்திரணி யன்னோடு சருவமீ னாக வங்கித்
தனயன்மூ வாயிர ரறப்பகை சுடர்ப்பகை தனிப்புதல்வர் மாள வரியுங்

கோளிருங் குலிசம்விட் டொருசூரன் மாயையுங் கொன்றுமா மரமிரண்டு
கூறாப் பிளந்துமயில் சேவலாய் வரவூர்தி கொடியாக நாட்டி யமலர்
குதூகலித் திடவிரணியன் கையறு நிலைசொலிக் கோவென் றிரங்க வலிமை
கொள்சிறை யகற்றியருள் சந்நிதிக் கந்தைய குற்றங்க ணீக்கி யருளே. (௩)

தேவதக்ஷ காண்டங்கள்.

திருப்பரங் குன்றெழுந் தருளியனை யானையைத் திருமணங்கொண்டு குடியின்
சீரேற்றி வரைபுகுந் தமரப் புரந்தரன் சேர்துன் பறிந்து துறவிற்
சேரவெணி யாண்டளப் போனுலோ காயதத் தீநெறியின் மாற்ற வவணிற்
சிறக்கமுளை குருவடுத் தொசூ ரனாலின்னல் சேர்தலென் செப்புமெனலுங்

கருப்பரங் குன்றவுப தேசமய னன்றுதக் கற்கருளி நோன்பு கருதக்
காட்டிட வவன்றவஞ் செய்தீச னருள்பெறீஇக் காணுபல மகவை யீன்று
கணிமருக னாமதி சபிக்கவது கங்கா தரக்கடவுள் காக்க வுமையாள்
கயிலைவிட் டருநதிப் பணிலமாய்க் குழவியாயக் கடவுடவ மாய்ம ணக்கத்

தருக்குற் றகன்கயிலை தக்கனண வங்குளார் தாந்தள்ள வெகுளி தள்ளத்
தந்தைமக மவிவிலக் கிச்சாலை செயதுவிதி தன்மகத் தெவரு மணுகச்
கங்கரற் கவிகொடா தாற்றத் ததீசிமுனி தான்றடுத் தவற்கு விடைக
டகவுரைத் தோம்ப சரிதைமால் சாபமுஞ் சாற்றவுந் தான மகமும்

விருப்புறச் சிவைநண்ண வேசவீ சன்பொறா வீரபத் திரனில் யாகம்
வீட்டியச் சிரஞ்சிறு விதிக்காக வடிமுடியை வேண்டிநே டிட்ட சரிதம்
விள்ளவர னற்பூசை யுற்றனன் கருவியிது குந்தனே விரதம் வேட்ப
வேண்டிய வடைத்தைகுற வள்ளிபுணர் சந்நிதிய வெளியனேனுய்யவிளையே. (௪)

முதனூலளவு

இன்னிசை வெண்பா

புராணம்பன் மூன்றிலக்கம் போங்கிரந்த மத்து
ளிராதபொரு ளெங்குமிலை சங்கிதையா றைம்பதெனக்
காண்டமுண ரீசத்துக் காண்டமிரா றுண்முதலா
றாண்டதமிழ்க் கந்தமதே யாம்.

செந்தமிழ்க் கந்தபுராணச் சிறப்பளவு.

நேரிசை வெண்பா

காண்டமா றேபடலங் காணூற்று நாற்பத்திதொன்
றீண்டுபதி னாயிரமுந் நூற்றெண்ணைந் – தாண்டவா
றெண்பாத் தமிழ்க்கந்தக் கென்ககச்சியப்பனாற்
றிண்பார் நிறைத்தானென் றே.