கட்டுரைகள்

சாணாக்கிய சதகம்

வடமொழிக்கணுள்ள “சாணாக்கிய சதகம்” என்னும் நீதிநூலை வடமொழி வல்லார் பலரும் அறிவார். அது சாணாக்கியர் என்னும் பெயருடைய பண்டிதர் செய்தது. சாணாக்கியராவார் மகததேசராசனாயிருந்த சந்திரகுப்தனுக்கு மந்திரியாயிருந்த ஒரு சந்நியாசி என்று சிலர் கூறுவர். அந்நூலிலே பலவகையான நீதிசாரங்களும் வருகின்றன. அவற்றுள்ளே பல…

மேலும் வாசிக்க..

அன்பினில் இன்பு

அன்பிலே இன்பம் விளையுமென்று ஆன்றோர் கூறுவர். அஃதாமாறு காட்டுதும். அன்பாவது: ஒருவருக்குத் தாங் கருதிய பொருட்கண் தோன்றும் உள்ள நெகிழ்ச்சி. அந் நெகிழ்ச்சி அப்பொருட்குந் தமக்கு முண்டாகிய கலப்பினாலே முதிர அதனால் அவ்வுள்ளத்தின்கண் ஒரு சுகநிலை தோன்றுகிறது. அதுவே இன்பமெனப்படும். அவ்வின்பமும்…

மேலும் வாசிக்க..

பஞ்சவிஞ்சதி விக்கிரகம்

அவ்வப்பொழுது சிவபிரானால் ஆன்மாக்களை இரட்சித்தற்பொருட்டு கொள்ளப்பட்டதாய், மகேசுர பேதங்களாயுள்ள சந்திரசேகரமூர்த்தி முதலிய மூர்த்தங்கள் பஞ்ச விஞ்சதி விக்கிரகங்களாம். பஞ்சவிஞ்சதி – இருபத்தைந்து, விக்கிரகம் – மூர்த்தம். அவை, இலிங்கோற்பவமூர்த்தி, சுகாசனமூர்த்தி, உமாசகர், அர்த்தநாரீசுவரர், சோமாஸ்கந்தர், சக்கரப்பிரதமூர்த்தி, ஶ்ரீமூர்த்தி, அர்த்தாங்கவிட்டுணு, தக்கிணாமூர்த்தி, பிச்சாடந…

மேலும் வாசிக்க..

வாக்கியத்தொடைநோக்கு

வாக்கியத் தொடைநோக்காவது வாக்கியந் தொடுத்தற்சிறப்பு. வாக்கியமாவது செய்யுள் வடிவின் வேறாகச் செய்யப்படும் சொற்களின் கூட்டம். பொருட்குந் தனக்குமுள்ள சம்பந்தமாகிய வலியுடையதே சொல்லெனப்படும். வாக்கியம், கத்தியம், வசனம், சொற்றொடர் என்பன ஒருபொருட்கிளவிகள் என்பர். வாக்கியம் என்று வரையப்படுவனவெல்லாம் அவாய்நிலையும், இயைபும், அண்மையும் உடையனவாயிருத்தல்…

மேலும் வாசிக்க..

சும்மா இரு

“ஐயா அருணகிரி அப்பா உனைப்போல மெய்யாக ஓர்சொல் விளம்பினர் யார்” தாயுமானவர் அருணகிரியாரைப் பாராட்டி வியப்படைகிறார். அருணகிரியார் சொன்ன மெய்யான சொல் யாது? “சும்மா இரு” என்பதாகும். “சும்மாஇரு சொல்அற என்றலுமே அம்மா பொருள்ஒன்றும் அறிந்திலனே” யோகசுவாமிகள் தம்மிடம் வந்த பக்தர்களுக்குச்…

மேலும் வாசிக்க..