திருஞானசம்பந்தப்பிள்ளை
யாழ்ப்பாணத்து நல்லூரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் திருஞானசம்பந்தப்பிள்ளை. ஆறுமுக நாவலரிடத்தும் அவரது மருகர் பொன்னம்பலபிள்ளையிடத்தும் மாணவராக இருந்தவர். இலக்கிய லக்கணமும். தருக்க நூலுஞ் சித்தாந்த சாத்திரமுங் கற்றவர். தர்க்கசாத்திரவாராய்ச்சியிலும், தர்க்கவாதஞ் செய்தலிலும் மிக்க வேட்கையுடையவர். இதனால் தர்க்ககுடாரதாலுதாரி என அழைக்கப்பட்டவர்.
திருஞானசம்பந்தப்பிள்ளை தென்னிந்தியாவின் கும்பபோணத்திலுஞ் திதம்பரத்திலும் பலநாள் வசித்தவர். யாழ்ப்பாணத்திலும் தென்னிந்தியாவிலும் பலருக்கும் பாடஞ் சொன்னவர். சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் அவர்களின் நண்பர்.
திருஞானசம்பந்தப்பிள்ளை தர்க்காமிர்தமொழிபெயர்ப்பு, அரிகரதாரதம்மியம், வேதாகமவாததீபிகை, நாராயணபரத்துவநிரசனம் முதலிய நூல்களும் செய்தவர். அரிகரதாரதம்மியத்திலிருந்து ஒரு பாடல் பாருங்கள்.
ஒருவனோ ரிடத்திலிந்த விசுவத்தில் வசிக்கையி லுவகை யுற்றான்
கருதுமற்றை யவன்விசுவே சுரனெனவே யவனியினிற் கழறப் பெற்றான்
இருவர்தமி லெவனதிக னெனவூகித் துண்மையிசைத் திடுக மாசு
மருவுதலி லறிவுடையீர் யாமவனை யடைந்துவழி படுவா மன்றே.
இவர் எறத்தாள 1900ம் ஆண்டளவில் தேகவியோகமடைந்தார்.