அச்சுவேலி தம்பிமுத்துப் புலவர்
சிறுகுறிப்பு
உசாத்துணை: ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்யாழ்ப்பாணத்து அச்சுவேலியில் 1857 இல் பிறந்தவர் தம்பிமுத்துப் புலவர். இவர் சொற்கலைப் புலவர் சுவாமி ஞானப்பிரகாசருக்கு உறவினர். அச்சுவேலியிலே “சன்மார்க்க விருத்திச் சங்கம்” என்னும் ஒரு சங்கத்தை தோற்றுவித்து அதன் மூலம் நல்ல ஒழுக்க நெறி நிற்பதற்கான கருத்துக்களை பரப்பி வந்தார். சன்மார்க்க போதினி என்னும் பத்திரிகையினை ஆரம்பித்து அதன் ஆசிரியராகவுமிருந்து நடாத்தி வந்தார்.
இவர் சன்மார்க்க அந்தாதி, சன்மார்க்க சதகம் முதலான நூல்களை இயற்றியுள்ளார். சன்மார்க்க வந்தாதியிலுள்ள இரு பாடல்களை இங்கே பாருங்கள்.
புழுவும் மலமும் சலமும் சளியும் பொருந்துமிந்தக்
கழிவுற்ற பாழுடம் பைப்பேணி யென்பலன் கண்டனையே
அழிவுற் றிடுபவர் தம்மைக்கண் டேனு மறம்புரியத்
தெளிவுற் றிடுமனம் வாராத தேது தெரிந்திலையேஈனம தாய்வலி பேசியுல் லாச வினிமையுற்றும்
மேனி மினுக்கியும் வீரமொ டுஞ்செலும் வீம்பர்களே
கூனித் தடியும் பிடித்தே யடிக்கடி குந்திக் குந்திக்
கானில் விழுந்துந் தவழ்ந்துஞ் செல்வோர்களைக் கண்டிடுமே
தம்பிமுத்துப் புலவர் 1937ம் ஆண்டினிலே இவ்வுலக வாழ்வு நீத்தார்.