சிற்றம்பலப் புலவர்
சிற்றம்பலப் புலவர் அவர்களுடைய புகைப்படம் எம்மிடத்தில் இல்லை. புகைப்படம் வைத்திருப்பவர்கள் oorodi@me.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இவ்விணையத்தளம் பூர்த்தியடைய உதவுங்கள்.
சிறுகுறிப்பு
உசாத்துணை : ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்இவர் ஏறக்குறைய இருநூறு வருடங்களுக்கு முன்னே மாதகல் என்னு மூரிலே வேளான் குலத்திலே இருந்தவர். வேதாரணீயஞ்சென்று பஞ்சலக்கணக் கணபதி ஐயரென்னும் பெயருடைய சைவக்குருவினிடம் இலக்கண இலக்கியங் கற்று மீளத் தம்மூரில் வந்திருந்தவர். இவரிடம் கற்றவர்கள் இருபாலை சேனாதிராய முதலியார், அராலி அருணாசலம் பிள்ளை முதலியோர் என்பர். இவர் கண்டியரசன்மேல், கிள்ளைவிடு தூது என்று ஒரு பிரபந்தம் பாடி அதை அரங்கேற்றற்காகக் சென்ற பொழுது வழியில் அவ்வரசன் ஆங்கிலேயரால் அகப்படுத்தப் பட்டான் என்ற சொற்கேட்டுத் தம்மூர்க்குத் திரும்பினர் என்பர்.