மேலும் சில நூல்கள்

The Tamil Plutarch

ஆசிரியர்: சைமன் காசிச்செட்டி
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1859

தென்னிந்தியாவிலும், ஈழத்திலும் வாழ்ந்த புலவர்களின் சரித்திரங்களை தொகுத்து ஆங்கில மொழியல் சைமன் காசிச்செட்டி அவர்களினால் எழுதி வெளியிடப்பட்டதே இந்நூல். புலவர்களின் வாழ்க்கை வரலாறுகளை தொகுக்கின்ற முயற்சியில் இதுவே முதன் முயற்சியாம். 1859 இல் வெளியாகிய இந்நூலே “பாவலர் சரித்திர தீபகம்”, “தமிழப்புலவர் சரித்திரம்” போன்ற நூல்களுக்கு முதநூலாய் அமைந்திருக்க வேண்டும்.

இதன் முகவுரையில் இந்நூலை தொகுப்பதிலிருந்த சிரமங்களை சைமன் காசிச்செட்டி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்,

It had long been my intention to offer to the public an account of the lives of our Poets, but the difficulties which presented themselves in procuring materials for the work owing to the absence of biographical records in Tamil either ancient or modern, was more than I had calculated upon, and I almost resolved to give up the undertaking in despair. Finding however that the traditions current among the people, carefully collected and scrupulously detached from fictitious and ornamental additions such as oriental imagination delights in would afford the desired information, I was induced to direct my attention to the source of knowledge, and the result with all its imperfections in now before the public.

இந்நூல் அகஸ்தியர் முதலாய் யாழ்ப்பாண நாயனார் வரை 195 புலவர் பெருமக்களுடைய வாழக்கை வரலாறுகளை கொண்டுள்ளது. இந்நூலில் வரலாறுகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பினும், புலவர்களின் பாடல்கள், தமிழிலும் நூலாசிரியரின் சிறப்பான மொழிபெயர்ப்பிலும் அமைந்திருக்கின்றன.

அபிராமிப்பட்டர் வராலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ள அபிராமி அந்தாதி பாடலை பாருங்கள்.

மணியே மணியினொளியே யொளிருமணிபுனைந்த
வணியே யணியுமணிக்கழ கேயணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தேயமரர் பெருவிருந்தே
பணியேனொருவரை நின்பத்மபாதம் பணிந்தபின்னே

Thou art the gem, thou art the brightness of that gem; thou art the necklace formed of that gem, and it is thou that gives it its beauty. Thou art the disease of those who do not approach thee, and the cure of those who approach thee; and thou art the great feast of the celestials. I shall not adore the feet of any after I have adored thy lotus feet.