வியாக்கிரபாத புராணம்

ஆசிரியர்: வைத்தியநாத தம்பிரான்
உசாத்துணை : ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி

வியாக்கிரபாத புராணம் என்ற நூல் வடமொழியிலுள்ள வியாக்கிர மான்மியம் என்ற நூலின் மொழிபெயர்ப்பென்பர். இதனைத்தமிழில் விருத்தப்பாவாற் செய்தவர் அளவெட்டி வைத்தியநாத தம்பிரான் என்று வழங்கப்படும். அவரை வைத்தியநாத முனிவர் என்றும் அழைப்பர். வியாக்கிரபாத புராணம் ஆரியச்சக்கரவர்த்திகள் கால நூலென்று கூறுவர். அது அச்சிற் பதிப்பிக்கப்பட்ட நூலாகத்தெரியவில்லை. ஆதனால் இப்பொழுது கிடைத்தற்கரியதாயிற்று. எனவே அதன் காலத்தைப்பற்றியோ பொருள் பற்றியோ எதுவும் சொல்வதற்கியலாதுள்ளது.