மேகதூதக்காரிகை

ஆசிரியர்: குமாரசுவாமிப்புலவர்
பதிப்பாசிரியர்: குமாரசுவாமி நாயுடு அண்டு சன்ஸ்
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1918
இந்நூலின் உரைநூல் மேகதூதக்காரிகையுரை கணேசையரால் செய்யப்பட்டு 1925இல் பதிப்பிக்கப்பெற்றது.

வடமொழியிலே காளிதாச மாகாகவி பாடிய மேகசந்தேசம் எனும் நூலை தமிழ் மொழியிலே பெயர்த்து கட்டளைக்கலித்துறையாக யாத்து சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர் செய்த நூலே மேகதூதக்காரிகை. இதனை பின்வரும் காப்புச்செய்யுளால் அறியலாம்.

திருமேவு போசன் சவையிற் கவிஞர் சிகாமணியாய்
வருமேக வீரன் கவிகாளி தாசன் வகுத்துரைத்த
ஒருமேக தூதந் தமிழ்க்கவி யாக வுரைக்கவரந்
தருமேக கந்த விநாயகன் பாத சரோருகமே.

இந்நூற்பெயர் மேகத்தினை தூதாக விடுத்த சரிதத்தை சொல்லுவதால் மேகதூதம் ஆயிற்று. கட்டளைக்கலித்துறையாய் யாத்தததில் மேகதூதக் காரிகையாயிற்று.

இயக்கனொருவன் சாபம் பெற்று பன்னிருமாதம் வனவாசம் செய்த வேளை தன் மனைவியிடம் மேகமொன்றை தூதாய் அனுப்புவதாய் இன்பஞ்சொட்ட செய்யப்பட்டதே இந்நூல். சுன்னாகம் சமஸ்கிருதகலாசால தமிழாசிரியராயிருந்த பிரம்மசிறீ கணேசையர் அவர்கள் மேகதூதக்காரிகையுரை எனும் பெயரில் இந்நூலுக்கு உரை எழுதி 1925ம் வருடம் பதிப்பித்து வெளியிட்டிருக்கின்றார்கள்.

மேகதூதக்காரிகை 1918ம் வருடம் சென்னையிலிருந்த சி. குமாரசுவாமி நாயுடு அண்டு சன்ஸ் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.