மேலும் சில நூல்கள்

பெயரகராதி

ஆசிரியர்: சந்திரசேகர பண்டிதர்
எழுதப்பட்ட வருடம்: 1842
பதிப்பாசிரியர்: யாழ்ப்பாண நூல் கழகம்
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1842

பெயரகராதி தமிழ் மொழியில் அகரவரிசையில் தொகுக்கப்பெற்ற முதலாவது அகராதி என்கின்ற பெருமையை உடையது. இவ்வகராதியில் ஏறத்தாள 58,500 சொற்கள்ள உள்ளன. இது சதுரகராதியினைவிட நான்கு மடங்கு அதிகமானது. இவ்வகராதியை தொகுத்தோர் சந்திரசேகர பண்டிதரும், சரவணமுத்துப் பிள்ளையவர்களுமாவார்கள்.

இதனை உடுவில் முத்துக்குமாரர் சிதம்பரப்பிள்ளை சொல்லிய சிறப்புப் பாயிரத்திலிருந்து அறியலாம்

தெல்லியம்பதியில்வரு நெல்லைநாதக்குரிசில் செய்தவமெனாவுதித்த சேனாதிராசகலை ஞானாதிராசனொடு தில்லையம்பலமகிபனாஞ் செந்தமிழ்ப்புலவனருள் சாமிநாதக்கலை ஞர் சேகரனுமாகமநிதிச் செழுமுதல் விநாயகன் றருவயிரமுத்தெனுந் திகழ்வடதமிழக்கலைக்கு

வல்லவனுமெல்விமதியங்கியை நிகர்ப்பஒளி மன்னுதணையென்னவரவே வண்டமிழ்க்கலைகள் பலவிண்டசொற்றிறனினொடு பண்டுரைத்திடுநிகண்டும்மகிதலம்புகழுமகராதிபலவுங்கொண்டு மாற்றமயனீக்கவெண்ணி வள்ளலுயர் தெள்ளுதமிழ் வெள்ளைமுதலுள்ள பாவல்ல சந்திரசேகரன்

மல்விலங்கினியவகராதியா அச்சிடைவகுத்தபின்வளங்குலாவு மலர்மகளுடன் றமிழ்சொல்கலைமகளுவந்தபதி மார்பினிற்குவளைமாலைவைத்தவன் வங்காளமுதவியாழ்ப்பாணம்வரைவளர்புகழ் படைத்த விருதன் வட்டாடன் முதல வீரட்டாவதானமு மதித்தறியவல்ல நிபுணன்

சொல்விலங்காதுகவினிதிமழை பொழிந்திடுந் தூயதொருகாளமேகந் துளுவவேளாளருட் சாமிமுதலருளுமுத்துங்களெனும் வேதகிரியாஞ் சுந்தரக்கவிமதச் சிந்தூரநடந்துதுகள் சிந்திடக் காட்டி நீட்டிச் சோர்விலநுபந்தமுந்தந்தனனிதற்கிணை சொலத் தரையில் வேறுமுளதோ.

இவ்வகராதி மானிப்பாய அமெரிக்கன் மிசன் அச்சகத்தில் அச்சிடப்பட்டு யாழப்பாணம் நூல் கழகத்தாரால் 1842 இல் வெளியிடப்பட்டது.