திருட்டாந்த சங்கிரகம்

ஆசிரியர்: பேர்சிவல்
எழுதப்பட்ட வருடம்: 1843
பதிப்பாசிரியர்: யாழப்பாண புத்தக சமூகம்
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1843

மிழ்ப் பழமொழிகளினைத் தொகுத்து அதன் ஆங்கில மொழிபெயர்ப்போடு வழங்குவதே திருட்டாந்த சங்கிரகம் என்கின்ற நூலாகும். பேர்சிவல் என்பாரால் தொகுக்கப்பெற்று, மொழிபெயர்க்கப்பட்டு 1843ம் ஆண்டிலே யாழ்ப்பாணத்து அமெரிக்க மிசனரிமாரின் அச்சகத்தில் அச்சடிக்கப்பெற்று, யாழ்ப்பாணம் புத்தக சமூகத்தாரினால் (Jaffna Book Society) வெளியிடப்பெற்ற இன்னூலில் 1873 பழமொழிகள் உள்ளன.

சிலவற்றை கீழே பாருங்கள்

அறப்படித்தவரங்காடி போனால் விற்கவுமாட்டார் கொள்ளவுமாட்டார்.
When the over-scrupulous go to the market, they neither buy nor sell.

அவதந்தரந் தனக்கந்தரம்
His evil stratagem ended in his own ruin

அறுப்புக்காலத்தில் எலிக்கு நாலுபெண்சாதி
During harvest the rat has four wives.

பொற்கலத்துக் கோசையில்லை, வெண்கலத்துக் கெல்லோவோசை
A golden plate has no sound, but a brass one has.

வெள்ளிவட்டிலும் வேணும் விளிம்பில் பொன்னும்வேணும்
A silver cup is wanted, and it must have a golden rim.

தமிழ் மக்களினைப்பற்றி மற்றோர் சிறிதளவாயினும் இந்த பழமொழிகளினை வாசிப்பதன் மூலம் அறிந்து கொள்ளமுடியும் என நம்பிய பேர்சிவல் பழமொழிகளினை அதன் சொற்சுவையும் பொருட்சுவையும் குறையாது மொழிபெயர்ப்பதென்பது இமாலயப் பணி என்பதனை உணர்ந்திருந்ததனால், தனது வெளியீட்டுக் குறிப்பில் கீழ்வருமாறு சொல்கின்றார்:

It is hoped that the following collection of Tamil Proverbs may be useful to those who are in any way connected with the interesting people who speak that language. Example of concise and forcible expression are hereby furnished, which may tend to aid in the study of the language and occasional allusions to national, social, and religious usages may suggest heads of valuable enquiry, whilst the models of thinking, the natural shrewdness and the other features of the Hindu mind will be seen through this medium. It is presumed that the translation generally conveys the sense of the original, although not always with the force, nor with the elegance which might be desired. Should it be called for, a future edition may remedy some of the existing faults and also supply the deficiencies, both as to the character of the translation and the number of the examples.