திருச்சிற்றம்பல யமகவந்தாதி

ஆசிரியர்: சபாபதி நாவலர்
பதிப்பாசிரியர்: சோமசுந்தர ஐயர்
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1887

யாழ்ப்பாணத்து வடகோவை சபாபதி நாவலர் அவர்கள் சிதம்பரத்திலே குடிகொண்டு அருள்பாலிக்கும் நடராஜப் பெருமான் மீது இயற்றிய பிரபந்தமே திருச்சிற்றம்பல யமகவந்தாதி. இது இந்நூலின் கண்ணுள்ள சிறப்புப் பாயிரத்தால் புரியும்.

சீரார் தென்னீழ வடகோவையான் சிவன் சேவடிக்கீழ்
நாரார் சுயம்புமன் பெற்ற சபாபதி நல்லறிஞ
னேரார்சிற் றம்பல வந்தாதி மாலை இசைத்தணிந்தான்
காரார் பொழிற்புலி யூர்மன்ற வாணன் கழலிணைக்கே.

நூறு யமக அந்தாதிப் பாடல்களால் அமைந்துள்ள இந்த பிரபந்தத்தை மாவிட்டபுரம் சோமசுந்தர ஐயர் அவர்கள் 1877 ம் வருடம் பதிப்பித்து வெளியிட்டார்கள்.

பாடல்களின் நான்கடிகளும் யமகமாய் அமைந்திருப்பது இந்நூலின் சிறப்பு. இப்பிரபந்தத்திலிருந்து இரு பாடல்களை பாருங்கள்.

கலந்தவர்க்கன் புகலப்பரிதாகி யெழுமுதையக்
கலந்தவர்க்கன் பற்றகாத்த சிற்றம்பலகர்த்தமறை
கலந்தவர்க்கன் றுதனியோகுகாட்டி நினக்கன்புறு
கலந்தவர்க்கப் பொருளேயிதற்காண வங்காரணமே. (௪௪)

காரணங்காரிய மாயையுலகெனக் கண்டிடுதக்
காரணங்காரிய மானனைநீயெனக் காண்பரிணங்
காரணங்காரிய மாசிறிராவிடங் கண்டவனே
காரணங்காரியை போற்று சிற்றம்பலங்காதலனே. (௪௫)