தாமோதரம்

பதிப்பிக்கப்பட்ட வருடம் :1971

ண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் 1950ம் வருடம் ஈழகேசரி பத்திரிகையில் “தொல்காப்பியப் பதிப்பு” எனும் பெயரில் ஒரு கட்டுரை எழுதினார்கள். அதிலே தாமோதரம்பிள்ளை அவர்கள் பதிப்பித்த நூல்கள் அனைத்திலுமிருக்கின்ற பதிப்புரைகளை தொகுத்து வெளியிடல் வேண்டும் என்று தனது அவாவினை சொல்லியிருந்தார்கள். இதனை மீளவும் இலக்கிய வழி என்கின்ற தன்நூலில் சொல்லியிருந்தார்கள்.

சி. வை. தாமோதரம்பிள்ளை யாழ்ப்பாணத்திற் பிறந்த குற்றத்துக்காக அவர் சரித்திரமாகிய தமிழ்ச் சரித்திரத்தை மறைக்க முயல்வது நன்றிக்கேடு. அதற்குப் பரிகாரஞ் செய்யும் முறையில் அவர் பதித்த பதிப்புக்களில் உள்ள பதிப்புரைகளைத் தொகுத்துப் புத்தக உருவத்தில் “தாமோதரம்” என்ற பெயரில் வெளியிடுவது நன்று. பதிப்புரைகள் அவ்வக் காலத் தமிழ்ச் சரித்திரமாய், உயர் வகுப்பு மாணவர்களுக்கு இன்றியமையாதனவாய் அமையும்.

பண்டிதமணியினுடைய மாணவர் சைவப்புலவர் அ. செல்லத்துரை அவர்கள் பண்டிதமணியின் வேண்டுகொளுக்கமைய பதிப்புரைகளை தொகுத்து 1952ம் வருடம் பண்டிதமணியிடம் பதிப்பிப்பதற்காக வழங்கியிருந்தார்கள். ஆனால் அது அச்சில் வரவில்லை.

செல்லத்துரை அவர்களிடம் அந்நூலை வெளியிட வேண்டும் என்கின்ற எண்ணம் எப்போதும் இருந்து வந்தது. அவ்வெண்ணம் 1970ம் வருடம் தாமோதரம் எனும் பெயரில் வெளியாகியது. இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியவர் பண்டிதமணி அவர்கள்.

வீரசோழியப் பதிப்புரை, கலித்தொகைப் பதிப்புரை, இலக்கண விளக்கப் பதிப்புரை, சூளாமணிப் பதிப்புரை, தொல்காப்பியம் எழுத்ததிகாரப் பதிப்புரை, தொல்காப்பியம் சொல்லதிகாரம் நன்றி கூறல், தொல்காப்பியம் பொருளதிகாரப் பதிப்புரை என்பன இந்நூலை அணிசெய்கின்றன.

யாழப்பாணம் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகத்தார் இந்நூலை பதிப்பித்து வெளியிட்டுள்ளனர்.