Menu

சைவதூஷண பரிகாரம்

ஆசிரியர்: ஆறுமுக நாவலர்
எழுதப்பட்ட வருடம்: 1854
பதிப்பாசிரியர்: ஆறுமுகநாவலர் வித்தியாநுபாலன அச்சியந்திரசாலை
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1854

ங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சைவ சமயிகளிளை புறந்தள்ளி கிறீஸ்தவ மத்தை சார்ந்தோருக்கு அனேக சலுகைகளை ஆட்சியாளர் வழங்கி வந்தமையும், அவ்வாறு பொருள்தேடும் நோக்கோடு கிறீஸ்தவ மத்தினை சார்ந்த பலரும் சைவமத்தை நிந்தித்து வருவதனையும் கண்ணுற்று மனம் நொந்த நல்லை நகர் ஆறுமுக நாவலர் அவர்கள், சைவ சமயமே சற்சமயம் என்று சொல்லும் பிரகாரம் 1854ம் ஆண்டிலே செய்து வெளியிட்ட நூலே சைவதூஷண பரிகாரம் என்கின்ற இந்நூல்.

சைவசமய நூல்களை சிறிதேனும் வாசித்தறியாத பாதிரிமார்கள், விவிலிய நூலினைக் கூட வாசித்தறிந்து கொள்ளாது சைவசமயம் தொடர்பாய் பிழையான கருத்துக்களை விதைத்து வருகின்றார்கள் என்று சொல்லி, விவிலிய நூலினின்றும் ஆதாரங்களைக் காட்டி விளக்குகிறது இந்நூல்.

இந்நூல் செய்த காரணத்தை நாவலர் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

அநாதி பகவானாகிய பரமசிவன் அருளிச்செய்த வேதாகமங்களால் உணர்த்தப்படும் சைவசமயமே சற்சமயமாம். இச்சற்சமயம் வழங்கும் நம் ஆரியக்கண்டத்திலே மிலேச்சர்களாகிய பாதிரிகள் புகுந்து, இச்சைவத்தை விளக்கும் சிவசாத்திரங்களை சிறிதும் அறியாமையினாலும், தாங்கள் முன்னே தழுவிக்கொண்ட துர்ச்சமயமாகிய கிறீஸ்து மதத்தின் மேல் வைத்த துரபிமானத்தினாலும், அப்புன்மதத்தைப் பிரசாரித்தலே தங்களுக்கு எளிதிற் பொருள் வரும்வழியாய் இருத்தலாலும், இச்சைவத்தை வாய்மொழியாலும் குருட்டுவழிமுதலிய புத்தகங்களாலும் அநியாயமாகவே தூஷிக்கின்றார்கள்.

நமது சிவசாத்திரங்களை சிறிதும் அறியாதவர்களும், அப்பாதிரிகளது பொயந்நூலாகிய விவிலிய நூலை முற்றும் வாசியாதவர்களும், தருக்க நூலிலே அற்பமேனும் பயிலாதவர்களுமாகிய சில சனங்கள் அத்தூஷணங்கள் ஒக்குமென்று மதிமயங்கி, கிறீஸ்துசமயப் படுகுழியில் வீழ்ந்த கெடுகின்றார்கள்.

யாம் அதனைக் கண்டிரங்கி, சைவத்தின்மேல் அப்பாதகர்களால் ஏற்றப்படும் தூஷணங்களாலே ஒருவரும் கெடாது சைவத்தின்வழியே நின்று உய்யும்பொருட்டு, அத்தூஷணங்கள் எல்லாற்றையும் நியயமாகவே களைந்து மெய்யறிவுச்சுடர் கொளுத்துகின்ற இந்தச் சைவதூஷண பரிகாரம் என்னும் பிரபந்தத்தை, பரமகாருணிகராகிய பரமசிவனது திவ்வியப்பிரசாதத்தினாலே செய்தோம்.

நாவலர் பெருமான் இந்நூலிலே செய்திருக்கின்ற வியாக்கியானம் ஒன்றை கீழே காணுங்கள்.

அபிஷேகப் பிரகரணம்

இலிங்கங்களை அதிட்டித்து அருள் செய்யும் கடவுளுக்கு எண்ணெய், பால், தயிர், நெய், தேன், இளநீர் முதலியவைகளினால் விதிப்படி அபிஷேகம் பண்ணுதல் புண்ணியமென்று சைவாகமங்கள் சாற்றுகின்றன.

யாத் 30. 22-33. யெகோவா மோசேயை நோக்கி, அதிஉத்தம சுகந்த திரவியங்களாகிய சுத்தமான வெள்ளைப் போளத்தில் பரிசுத்த ஸ்தாத்துச் சேக்கலின்படி, 500 சேக்கலும், கருவாப்பட்டையில் அதிற்பாதியாகிய 250 சேக்கலும், சுகந்தவசம்பு 250 சேக்கலும், இலவங்கப்பட்டையில் 500 சேக்கலும், சீதவிருட்சத்தெண்ணையில் ஒரு கிண்ணமும் எடுத்து, பரிமள தைலக்காரனுடைய செய்கையாற் செய்யப்பட்ட பரிமளதைலத்தைப்போல, அவைகளினாற் சுத்த அபிஷேக தைலத்தைச் செய்வாயாக. அதுவே அபிஷேக தைலமாயிருக்க வேண்டும். ஆதினாலே சபையின் ஆவாசத்துக்கும், சாட்சிப்பெட்டிக்கும், பீடத்துக்கும், அதின்பாத்திரங்களெல்லாவற்றிற்கும், கிளை விளக்குக்கும், அதின்கருவிகளுக்கும், தூபவேதிகைக்கும், தகனபலிவேதிகைக்கும், அதின்பாத்திரங்களெல்லாவற்றிற்கும், தொட்டிக்கும், அதின்பாதத்திற்கும் அபிஷேகம் பண்ணக்கடவாய். அவைகள் பரிசுத்தமாகும்பொருட்டு, அவைகளைப் பரிசுத்தப்படுத்துவாயாக. அவைகளைப் பரிசிக்கிறயாவும் பரிசுத்தமாகும். ஆரோனும் அவன்புத்திரரும், எனக்கு ஆசாரியத்தொண்டு செய்யும்படி, நீ அவர்களுக்கு அபிஷேகம் பண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயக. நீ இஸ்ரவேற்சந்ததியாரை நோக்கி, உங்கள் தலைமுறைதோறும் எனக்குரிய பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கவேண்டும். இது மனிதருடைய சரீரத்தில் வார்க்கப்படாது. இதற்கொப்பாக நீங்கள் வேறேசெய்யவும்படாது. இது பரிசுத்தமானது. இது உங்களிடத்திற் பரிசுத்தமாயிருக்கவேண்டும். இதற்கொப்பாகத் தைலமுண்டாக்கிறவனும், இதில் எடுத்து அந்நியன்மேல் வார்க்கிறவனும் தன் சனங்களினின்றும் சேதிக்கப்படுவான் என்று சொல்லென்றார்.

இப்படியே உன்சமயநூலில் அபிஷேகம் விதிக்கப்பட்டமை கண்டும், காணாதார் போல் நீ நாங்கள் அபிஷேகம் பண்ணுதலைக் கண்டு, விக்கிரகங்களுக்கு அபிஷேகம் பண்ணினதினாலே பயனில்லையென்று பிதற்றுவது நீதியா?

சைவதூஷண பரிகாரம் எனும் இந்நூல் வெளியிடப்பட்டபோது இது இந்து சமயம் மீதான ஆதரவை பெருமளவில் மக்களிடையே உருவாக்க உதவியது. Rev. E. J. Robinson1 அவர்கள் 1867ம் வருடம் இலண்டனில் எழுதி வெளியிட்ட “Hindu Pastors: A memorial” எனும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

Proceeding with unabated talent and zeal, the movement2 crowned itself in 1854 in a work entitled “Sivadhushana-parikaram;” in which the author, doubtless Arumugavar, displaying an intimate and astonishing acquaintance with the Holy Bible, labours cleverly to show that the opinions and ceremonies of Jehovah’s ancient people closely resembled those of Sivaism, and were neither more nor less Divine in their origin and profitable in their entertainment and pursuit. The notion of merit held by the Hindus, their practices of penance, pilgrimage, and lingam-worship, their ablutions, invocations, and other observances and rites, are cunningly defended on the authority of our sacred writings! That a great effect was thus produced in the favour of Sivaism and against Christianity cannot be denied.

இதனைப்போலவே இந்நூல் பற்றி வெஸ்லியன் மிசனரியார் இலண்டனில் 1855 இல் வெளியிட்ட தமது அறிக்கையில் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

The most remarkable event of the year has been the publication in Tamil of a work of extraordinary literary and mytho ……………….. Saiva Dushana Parikaram. It is …………………….. Saivism and antagonist to Christians. ………………. the peculiarity of forsaking the old ………………. and attack, and adopting an entirely new and different strategy. It does not argue or assume that Christianity is theoretically illogical and unsustained, or practically weak and impossible; it does not dogmatically pronounce the doctrines and ritual of Saivism to of Divine authority, or to be superior to those of Christianity. Neither does it adopt the old subterfuge that both Saivism and Christianity are from God, but the former intended for the Saivite and the latter for the Christian. It undertakes to prove that every one fo the distinctive articles of Saivite belief and observance has its parallel and warrant in the Credenda and ceremonial set forth in the Christian Scriptures. Of the twenty-two articles which the author seek thus to establish, oblations, ablutions, invocations, penance, pilgrimage, lingam worship, and merit are not the least conspicuous. The amount of Scripture brought to the defence of those particulars, is most surprising, and the adroitness with which every possible objection is anticipated and repelled belongs only to a first rate mind. The book is doing much mischief.

இது ஆறுமுக நாலவரின் திறனையும், சைவதூஷண பரிகாரத்தின் தாக்கத்தையும் பெரிதும் வெளிக்காட்டி நிற்கின்றது.

  1. Late Wesleyan Missionary in Ceylon
  2. ஆறுமுக நாவலர் கிறீஸ்தவ மத மாற்றத்திற்கு எதிராய் ஆரம்பித்த இயக்கம்