சிவராத்திரி விரத மகிமையினைச் சொல்லி அவ்விரதம் நோற்போர் அடையும் நன்மைகளையும் சொல்லி நெல்லைநாதர் என்பார் செய்த புராணமே சிவராத்திரி புராணமாம். யாழப்பாணத்திலிருந்த வரதபண்டிதர் அவர்களும் ஒரு சிவராத்திரி புராணம் செய்திருக்கின்றார்கள்.
நெல்லைநாதர் எவ்வூரார் எக்காலத்தார் என்பது தெரிந்திலது. யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டை சிவசுப்பிரமணிய ஐயர் அவர்கள் இந்நூலை 1881ம் வருடம் சில பிரதிநிரூபங்களை கொண்டு ஆராய்ந்து பதிப்பித்து வெளியிட்டார்கள்.
பாயிர அத்தியாயம், விட்டுணுவராகமாய் உதித்த அத்தியாயம், அங்குலன் முத்திபெற்ற அத்தியாயம், சூதுகுமாரன் பதவிபெற்ற அத்தியாயம், இயமனுக்கு சிவனுபதேசித்த அத்தியாயம் என ஐந்து அத்தியாயங்களில் 303 விருத்தங்களை கொண்டு இப்புராணம் அமைந்திருக்கின்றது. இந்நூலாசிரியர் நெல்லைநாதர் என்பது பாயிர அத்தியாயத்திருக்கும்
மறைதொழும் சிவராத்திரிமான்மியம்
அறிவின்மிக்க அருந்தவர்க்காரிய
முறைசொல்சூதன் மொழிந்தனனற்றமிழ்த்
துறையிலோதினன் சூழ்நெல்லைநாதனே
எனும் விருத்தத்தாலறியலாம்.
சிவராத்திரி நோற்பதால் வரும் பயன்களை பாயர அத்தியாத்திலே காணலாம்.
வேதியர்க்குமொழிந்தவிதிதிகழ்
சாதியர்க்குஞ்சண்டாளர்க்குமுத்தியாந்
தீதிலாச்சிவராத்திரிநோற்றிடின்
ஆதியீசன் அடியிணையெய்தலாம் (௧௩)பத்திமுத்திபராபரைநல்லருள்
சித்தியாஞ்சிவராத்திரிநோற்றிடின்
நித்தன்மால் அயனேமியன் காணொணா
அத்தனையருள் பதமெய்தலாம் (௧௪)வேறுவேறுவிரதமும்வேள்வியும்
நூறுசெய்துநொடிக்கினுமொக்குமோ
ஆறணிந்தஅரன் கதிவேண்டினாற்
றேறிநீர் சிவராத்திரிசெய்மினே (௧௫)