சிவகர்ணாமிர்தம்

ஆசிரியர்: சபாபதி நாவலர்
பதிப்பாசிரியர்: சிவப்பிரகாசபிள்ளை
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1885

டமொழியிலே அப்பய தீக்ஷித யோகிகள் செய்த சிவகர்ணாமிர்தத்தினை மொழிபெயர்த்து தமழிலே வசன கிரந்தமாய்; பூர்வபக்கம், சித்தாந்தமென இருபகுதியாய் சிவபரத்துவம் நுதலவென யாழ்ப்பாணத்து வடகோவை சபாபதி நாவலர் அவர்கள் எழுதிய நூலே இதுவாம். திருப்பனந்தாட் காசி மடாதிபதி ஶ்ரீமத் குமாரசுவாமிச் சுவாமிகள் கட்டளையிட்டருளியபடி சபாபதி நாவலரவர்கள் இந்நூலை இயற்றி 1885ம் வருடம் அச்சிட்டு வெளியிட்டார்கள்.

இந்நூல் வரலாற்றை சபாபதி நாவல ரவர்கள் பின்வருமாறு கூறுவார்கள்.

அம்பிகையொடு கூடும்வடிவுடை நித்தரான
வெம்பெருஞ் சதாசிவப்பேரிறைவரே பிரமமென்றுந்
தம்பெரும் விபூதிலேசமேயிந்தச் சகமாமென்று
மிம்பர்மற் றெடுத்துரைப்பவைதிக ரென்பமன்னோ.

பாஞ்சராத்திரத்திற் சாலப்பதிந்த புந்தியர்களானோர்
தாஞ்சிவபிரானுயர்ச்சி தன்னின் மிக்கழுக்காறுற்றுத்
தீஞ்சுவைகொழிக்குஞ் சந்தத்திருமறைகளுக்கு மிக்கு
வாஞ்சைவிண்டுயர்ச்சி மேலும் வகுப்பர்தாற்பரியமன்னோ.

அத்திறமறுக்கு வண்ணமளப்பில் சீர்ச்சிவச்சொன்முற்கொ
டத்துவவிவேககநூலிற் சாற்றினம் விரித்திட்டந்தச்
சுத்தநுற்பொருளை யெல்லாஞ் சுருக்கியீண்டுரைக்கலுற்றாம்
வித்தையின்மெலியர்தாமுஞ் சிவபிரான் மேன்மைதேற.

திருவாடுதுறை ஆதீனத்து இராமலிங்க சுவாமிகள், ஆறுமுக சுவாமிகள், பழனிக்குமார சுவாமிகள், கும்பகோணம் கல்லூரி தமிழ்ப்பண்டிதர் உ. வே. சாமிநாதையர், சேற்றூர் சமஸ்தான வித்துவான் சுப்பிரமணிய கவிராசர், திருவாடுதுறை பொன்னுசாமிப்பிள்ளை ஆகியோர் இந்நூலுக்கு சிறப்புப்பாயிரம் சொல்லியிருக்கிறார்கள்.

இந்நூலின் தற்சிறப்புப்பாயிரம் வருமாறு.

வாகைமாநடற் றொழுதுமாதவச் சிவஞான
யோகிசுப்பிரமணிய தேசிகனை யுண்ணிறீஇத்தே
மீகொளப்பதீக் கிதனருள் சிவகர்ணாமிர்தத்தை
யூகமார்தமிழ்ப் பெயர்த்துநாவலர் பொருட்டுரைப்பாம்.