Menu

கருவூர் மான்மியம்

ஆசிரியர்: நா. கதிரவேற்பிள்ளை
எழுதப்பட்ட வருடம்: 1906
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1906

ரணிநகர சமஸ்தான வித்துவானும், மாயாவாத தும்சகோளரி என பெயர் பெற்றவருமான யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி மகாவித்துவான் நா. கதிரவேற்பிள்ளை அவர்கள் தென்னிந்தியாவின் கொங்கு நாட்டிலே அமைந்து சிறந்திருக்கும் சிவத்தலமாகிய திருக்கருவூர் தலச்சிறப்பை சொல்லி செய்த நூலே கருவூர் மான்மியம் என வழங்கும் நூலாகும்.

கொங்குநாட்டில் திருப்புக்கொளியூரவிநாசி, திருமுருகன் பூண்டி, திருநணா என்னும் பவானிகூடல், கொடிமாடச் செங்குன்றூர் என்னுந் திருச்செங்கோடு, வெஞ்சமாக்கூடல், திருப்பாண்டிக் கொடுமுடி மற்றும் திருக்கருவூர் எனும் ஏழு தலங்களும் தேவாரம் முதலாகப் பெரியபுராணமீறாகவுள்ள பன்னிரு திருமுறைகளாலும் மங்கள சாசனம் செய்யப்பெற்று விளங்குகின்றன. இவற்றுள்ளே திருக்கருவூர் திருத்தலத்திற்கு, தலமான்மியத்தை விளக்கும் தலபுராணம் ஒன்று இருப்பினும், கற்றவர்க்கு மட்டுமே அது பயன்படலால், அந்நகரப்பிரபுவாய் இருந்த அண்ணாமலைச் செட்டியார் வேண்டுகொளுக்கிணங்க மற்றையோர்க்கும் பயன்படுமாறு கதிரவேற்பிள்ளை அவர்கள் வேதசிவாகமாதி பிரமாணங்களுடன் இந்நூலை யாத்து 1906ம் வருடம் நடைபெற்ற ஆலய கும்பாபிடேகத்திலே அரங்கேற்றினார்கள்.

இந்நூலில்,

கருவூர்த் தல விவரம்
மான்மிய வரலாறு
திருத்தலப் பெயர்களுங் காரணமும்
திருத்தலத்தின் எல்லை
திருத்தலத்தின் விசேடம்
தீர்த்த விளக்கம்
அறுவகை மங்கலங்கள்
மூர்த்தி விசேடம்
பசுபதீசப் பெயர் விளக்கம்
வஞ்சுளேசப் பெயர் விளக்கம்
காமதேனு பூசித்தது
அலங்காரவதி யம்மையார் அருச்சித்தது
பிரமன் பூசித்தது
வியாசர் வழிபட்டது
திக்குப் பாலகர் சேவித்தது
அமரர் முதலானோர் அருச்சித்தது
சுக்கிரன் றுதித்து நோற்றது
முசுகுந்தன் முதன்மை பெற்றது
காலவமுனிவர் கதித்த பூசனை
விபண்டக வேடன் விழைவினுய்ந்தது
கோபிநாதசத்துவன் குட்டநோய் நீங்கியது
எறிபத்த நாயனார் இணையடி பெற்றது
புகழ்ச்சோழ நாயனார் முத்தி புக்கமை
கருவூர்த் தேவர் கதிபெற்றது
நரசிங்க புராண சரிதம்
நூற்பயன்
பசுபதி நாம வேதபாத ஸ்தோத்திரம்
௸ கலாஸ்துதி
திருவானிலைத் தேவாரத் திருப்பதிகம்
பசுபதித் திருவிருத்தம் (திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்)
திருவாசக திருவிசைப்பாக்கள்
பெரியபுராணத்துதி
திருத்தொண்டர் தொகை
திருத்தொண்டர் திருவந்தாதி
திருத்தொண்டர் புராணசாரம்
கருவூர்ப் புராண தோத்திரம்
கருவூர்த்தல மகோற்சவ விவரம்
திருக்கோயிலினுந் திருவீதியினுஞ் செய்யத்தகாத குற்றங்கள்
தீர்த்தங்களிற் செய்யத்தகாதன
அடியர்கள் திருநட்சத்திரம்
மகாகும்பாபிடேகச் சிறப்பு

ஆகியன கூறப்பட்டுளளன. கீழே நூலின் கண்ணே சொல்லப்பட்டுள காலவமுனிவர் கதித்த பூசனை இனை பாருங்கள்

காசிபகோத்திரத்திற் றோன்றிய ஆதிசைவ முனீந்திரராகிய காலவரென்னு முனிவர் இனிமேற் றாயரின்கருவூராது அத்துவிதமுத்தித் திருவூருற்று வாழ விரும்பித் தமது ஆசிரியராகிய தேவத்துதிமுனிவரை யடுத்து உபாயந் தெரித்தருளுகவென்று வேண்டாநிற்ப, அன்னவர் இவணுள்ள தீர்த்தவிசேடங் கூற வந்து ஆறுதீர்த்தங்களினும் விதிப்படி மூழ்கிப் பசுபதியை யருச்சித்துப் பரமுத்தியடைந்தார். “கருவூர்க் கண்டவர் கருவூர் காணார்” என்ற பழமொழி யந்நாட் டொடங்கி வழங்கலாயிற்று.