அட்டகிரிக் கந்தர்பதிகம்

ஆசிரியர்: சோமசுந்தரப் புலவர்
பதிப்பிக்கப்பட்ட வருடம் :1909

யாழ்ப்பாணத்து நவாலி அட்டகிரிப்பதியிலே கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் முருகப்பெருமான் மீது நவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் பாடிய பதிகமே அட்டகிரிக் கந்தர்பதிகமாகும். இந்நூல் 1909 ம் வருடம் யாழ்ப்பாணம் சைவப்பிரகாச யந்திரசாலையில் அச்சிற் பதிக்கப் பட்டு வெளிவந்தது.

விநாயகப்பெருமான், கலைவாணி மீது வெண்பாவினால் இரு காப்புச்செய்யுட்களும், பதினொரு ஆசிரிய விருத்தத்தால் பதிகமும், கலித்துறையால் ஒரு வாழிச் செய்யுளும் கொண்டு அமைந்திருக்கிறது இந்நூல்.

காப்புச்செய்யுட்கள்

ஞானத் திறனறிந்தோர் நாடுமெழி லட்டகிரித்
தானத்தன் மீதுதமிழ் பாட – வானத்துச்
சஞ்சரிக்குந் திங்கட் சடையோ னளித்தமுதற்
குஞ்சரத்தை நெஞ்சே குறி.

வெள்ளைக் கமல மலர்மீதுங் கவிவாண
ருள்ளக் கமலத்து மொத்திருக்கும் – வெள்ளைக்
கலையாளை ஞானக் கலைதேடிக் காணா
நிலையாளை நெஞ்சே நினை.

வாழி.

வேல்வாழி வெற்றி மயில்வாழி யன்பர் வினைகெடுக்குங்
கால்வாழி பன்னிரு கைவாழி வாழி கருணைமுகம்
சேல்வாழு நாட்டத் தியானையும் வள்ளியும் வாழிசெப்பு
நூல்வாழி வாழி செவ்வே ளட்டமாகிரி நூறுகமே.

அட்டகிரிக் கந்தர்பதிகத்தை நூலகத்தில் முழுமையாக வாசியுங்கள்