அழகொல்லை விநாயகர் ஆலயம்

ந்துமா சமுத்திரத்தின் முத்தென விளங்கும் இலங்கையின் வடபாகத்தே அமைந்தது யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத்தின் வடபால் கலைவளம், பொருள்வளம், நீர்வளம் என தெய்வீக மணம் செறிந்து விளங்குவது அளவெட்டி என்னும் கவினுறு கிராமம். இங்கு பல புகழ்பெற்ற ஆலயங்கள் நிறைந்து விளங்குகின்றன. இவ்வளவெட்டி கிராமத்தின் வடக்கே அமர்ந்து அருள்பாலித்து வருகின்றார் அளவெட்டி அழகொல்லை விநாயகர்.

பூர்வீகம்

குதிரைமுகம் நீங்க நகுலேசுவரப்பெருமானை வணங்கி நீங்கப்பெற்ற மாருதப்புரவீகவல்லி மாவிட்டபுரம் கோவிலுக்கு தெற்காக கட்டுவித்த ஏழு விநாயகர் ஆலயங்களில் ஒன்று இந்த அழகொல்லை விநாயகர் ஆலயம் என்று கர்ணபரம்பரைக்கதைகள் கூறுகின்றன. கொல்லங்கலட்டி விநாயகர் ஆலயம், பன்னாலை வரத்தலம் விநாயகர் ஆலயம், கும்பிளாவளை விநாயகர் ஆலயம், பெருமாக்கடவை விநாயகர் ஆலயம், ஆலங்குளாய் விநாயகர் ஆலயம், கல்வளை விநாயகர் ஆலயம் என்பனவே மற்றைய ஆறுமாம்.

அழகொல்லை விநாயகர் ஆலயம் பற்றிய குறிப்புகள் யாழ்ப்பாணக் கச்சேரியில் உள்ள தோம்பில் குறிக்கப்பட்டுள்ளன. கோயிலின் பெயர் அளவோலைப்பிள்ளையார் ஆலயம். 1850இல் இக்கோயில் நல்லதம்பி, ஆறுமுகம், விநாயகர் வீரகத்தி, சபாபதி ஐயர், சீனிவாசக ஐயர் ஆகியோரின் முயற்சியால் கல்லால் கட்டப்பட்டு ஓலையால் வேயப்பட்டது. தீர்த்தக்கேணி 1852ம் ஆண்டு கட்டப்பட்டது. கட்டியவர் பெயரும் கட்டப்பட்ட காலமும் தீர்த்க்கேணிக்கு முன்னுள்ள நடுகல்லில் குறிக்கப்பட்டுள்ளன. பெயர் தெளிவாக தெரியவில்லையாயினும் கட்டப்பட்ட காலம் தெளிவாக தெரிகின்றது.

மூர்த்தி

பரிவார மூர்த்திகளான மகாலட்சுமி, விக்கினேஸ்வரர், முருகன், வைரவர், சிவன், நாகதம்பிரான், ஆகியோருக்கு உள்பிரகாரத்தில் தனித்தனி கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாலயம் அமைக்கப்பட்ட பின்னர் 1938, 1966, 1978 ஆகிய ஆண்டுகளில் மகாகும்பாபிடேகம் சிறப்பாக நடைபெற்றதாக அறிய முடிகின்றது. 1928 இல் ஒரு கும்பாபிடேகம் நடைபெற்றதாக கூறப்படுகின்றபோதும் அதனை உறுதிசெய்ய இயலவில்லை.

தலநூல்கள்

அளவெட்டி அருட்கவி சீ. விநாசித்தம்பிப்புலவர் அவர்கள் அளவையூர் அழகொல்லை விநாயகர் மீது திருப்பதிகம் பாடியுள்ளார். விநாயகர் ஆலயத்தின் பெருமை அற்புதங்கள் யாவும் இதில் விரிவாய் விளக்கப்பட்டுள்ளன. 1976 இல் இப்பதிகம் தொண்டர்சபையாரால் அச்சில் வெளியிடப்பட்டது. இயற்றியது யாரென்று அறிய முடியாத அழகொல்லை விநாயகர் பவனிப்பரவல் என்னும் செய்யுள்தொகுப்பும், சிவன் ஊஞ்சல் என்னும் ஊஞ்சல் பதிகமும் ஆலயத்தில் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அழகொல்லை விநாயகர் ஊஞ்சல், அழகொல்லை விநாயகர் திருப்பள்ளி எழுச்சி என்பன அளவெட்டி வடக்கு பண்டிதர் மாணிக்கம் என்பவரால் செய்யப்பட்டு தொகுத்து நூல்வடிவில் 1985 இல் வெளியிடப்பட்டன.

அளவெட்டி அளகொல்லை விநாயகர் ஆலயம் அண்மையில் பெரும் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு பெரும் இராஜ கோபுரத்துடனும் அழகிய விமானத்துடனும் வனப்பு மிகு நந்தவனத்துடனும் யாழ்நகரில் உள்ள ஆலயங்களில் அழகியதொரு ஆலயமாக திகழ்கின்றது. விநாயகப்பெருமானும் இங்கு வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றார்.

வாசகர் கருத்துக்களை காட்டு / மறை

2 Comments

  1. Jathu சொல்லுகின்றார்: -

    Hi
    This jathu from collombo
    working in virakesari
    Hi
    basically im from alavty but living in colombo. as usual tamil person status.
    thx for writing about our temple.
    i have more pics and i have article about this temple which written by my periyappa (Velupillai subramaniya- Ret principal)
    if you guys like to add the articles and better clear pictures i can send you them
    my email id
    root_j@yahoo.com

    thodartum ungal pani valgaaa

    Thank you.
    Jathu

  2. ARULCHELVAN சொல்லுகின்றார்: -

    அன்புடையீர்!,
    ஊருக்கு நீர் செய்யும் நற்பணிகள்
    மிகவும் பாராட்டுக்குரியது, தொடரட்டும் இந்த சைவத்தொண்டு!. நல் வாழ்த்துக்கள்,
    ———————————————————–,
    —————————————————————-
    Arulakam.Wordpress.com (arulakam.wordpress.com)

    Useful Website for Tamils, Hindus and Saivites for information on the following subjects by clicking on the multifarious links on:-

    * Tamil Literature:- 349 subjects are covered including Thirukural, Aathisoodi, Konraiventhan, Tiruvasagam and famous sayings by Ancient Philosophers.
    * History of Tamils and Ancient Tamil Kingdoms

    * Entertainment:- Hindu religious films and film clips, Carnatic Music, devotional songs etc;

    * Information on the Hindu Religious Aathinams in India

    * Famous Hindu and Saivite Festivals depicting their religious significance and stories.

    * Hindu and Saivite Temples in India:- Over 300 Temples are covered including Ganapathy Temples, Sivan Temples, Amman Temples, Murugan Temples, Vishnu Temples and famous Navakirakam Temples with full descriptions and panoramic views of some.

    * Hindu Religious Traditions including Hindu Agama practices and information on traditional festivals with full descriptions.

    * Tamil Children Names for your newly born child .

    Thankyou,
    From,
    A.Arulchelvan.

ஆலய புகைப்படங்கள்