வைத்தியநாதச்செட்டியார்
வைத்தியநாதச் செட்டியார் யாழ்ப்பாணத்து அச்சுவேலித் தெற்கிலே வைசியர் குலத்திலே அரிகரபுத்திரச்செட்டியரின் மைந்தனாக 1759ம் ஆண்டு பிறந்தார். இவர் அங்குள்ள நெல்லியவோடை அம்பாள் கோவிலில் பூசகராக இருந்துவந்ததோடு நல்ல பாவாணராயும் விளங்கினார். இவர் நெல்லியவோடை அம்பாள் மீது பல பாக்களுடன் பிள்ளைக்கவியும் ஒன்று இயற்றினார். அதில் ஒரு விருத்தம் வருமாறு.
பவளத்தியற்றுங் கலசமிசைப் பன்னீரதனாலுலைவார்த்து
பதுமராகவடுப்பில் வைத்துப் பகருங்கனகத்தழல்கொழுத்தித்
திவளும்வைர லிறகடுக்கிச் சிறந்ததவளவரிசிபெய்து
சேரவடித்து நீறணிந்து செவ்வேயிறக்கிப் பசுங்கரணம்
தவழும் பச்சையிலைமீது தயங்கப்படைத்துச் சராசரங்கள்
தழைக்கவளர்க்குமருட்கௌரி தகைசேர் நெல்லியவோடைவளா
குவளைவிழிச்சி மெய்ஞ்ஞானக் கொழுந்தேசிற்றில்சிதையேலே
குன்றமுலைச்சி மாரியம்மாள் கோதாய் சிற்றில் சிதையேலே.
வைத்தியநாத செட்டியார் 1844ம் ஆண்டு சிவனடிசேர்ந்தார்.

0 Comments