வரதபண்டிதர்
சிறுகுறிப்பு
தந்தையார் : அரங்கநாதையர்வாழந்த வருடம் : 1700
உசாத்துணை: ஈழநாட்டுத் தமிழ்ப்புலவர் சரிதம்
வரதபண்டிதர் காசியிலிருந்து வந்து யாழ்ப்பாண நாட்டிலே சுன்னாகம் என்னும் ஊரில் வசித்த வேதியர் குலத்தில் பிறந்தவர். ஏறக்குறைய 1700ம் வருடங்களின் ஆரம்ப காலங்களில் இருந்தவர். தமிழில் இலக்கிய இலக்கணங்களும், சோதிடமும் வைத்தியமும் கற்று பாண்டித்தியம் பெற்றவர். வேதாந்த சித்தாந்த நூல்களும் நன்கு கற்றவர். அவற்றிலே அனுபவமும் பெற்றவர். பாடுதலில் மிகு சாமர்த்தியம் வாயந்தவர். வாழவுங் கெடவும் பாடவல்லவர். இதனால் இவரை வரகவி என்றும் கூறுவர். இவரது தந்தையார் பெயர் அரங்கநாதையர் என்பது-
செந்தமிழ் முனிவன் செப்பிய கதையும்
கந்த புராணக் கதையினுள் ளதுவும்
இலிங்க புராணத் திருந்தநற் கதையும்
உபதேச காண்டத் துரைத்தநற் கதையும்
தேர்ந்தெடுத் தொன்றாய்த் திரட்டியைங் கரற்கு
வாய்ந்தநல் விரத மான்மிய முரைத்தான்
கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்கும்
துன்னிய வளவயற் சுன்னா கத்தோன்
அரங்க நாத னளித்தருள் புதல்வன்
திரம்பெறு முருகனைத் தினந்தொறும்
வரம்பெற வணங்கும் வரதபண் டிதனே
என்னும் பிள்ளையார் கதைச் சிறப்புப்பாயிர செய்யுளானே அறியக்கிடக்கின்றது. இவரியற்றிய நூல்கள் ஆவன
சிவராத்திரி புராணம்
ஏகாதசி புராணம்
கிள்ளைவிடு தூது
அமுதாகரம்
பிள்ளையார் கதை முதலியன.
இவற்றுள்..
சிவராத்திரி புராணம் சிவராத்திரி விரத மகிமை கூறுவது. ஏகாதசிப் புராணம் ஏகாதசி விரத மகிமை கூறுவது, கிள்ளை விடு தூதூ காங்கேயன் துறைக்கு தென்பாகத்திலே கண்ணியவளை என்னுந் தலத்திலே வீற்றிருக்கும் குருநாதசுவாமி (கந்தசுவாமி) மேல் இயற்றியது. இதன்கண் சிவபிரான் சுந்தரருக்காகப் பரவையார்பாற் தூதூ போன கதையும், அனுமான் இராமபிரானுக்காச் சீதைபாற் றூதுபோன கதையும், கண்ணபிரான் பஞசவர்க்காகத் துரியோதனன்பாற் றூதுபோன கதையும், நளன்றூது முதலியவும், பீதாம்பரங் கிழித்துக் காலிற் சிலந்தியைச் சோழ ராஜனுக்குச் சடையப்பவள்ளல் காட்டிய கதை முதலியவும், மாவிட்ட புரம் முதலிய ஊர்களில் வசித்த வேளாளர்களின் மரபு முதலியவுங் கூறியுள்ளார். இந்நூல் இவர் வழித்தோன்றலும் இந்திய தேச வாசருமாகிய பண்டிதர் இரத்தினேசுவர ஐயரவர்களால் அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவரது கவிச்சுவை யுணர்வதற்காகச் சிவராத்திரி புராணத்துள் ஒரு செய்யுள் காட்டுதும்:-
காவரசு மலரயன்மால் கடவுளர்க்காச் சென்றமர்செய் காமனாமைம்
பூவரசு படவிழித்துப் புனவேங்கை யத்தியதள் புனைந்துபோர்த்த
தேவரசு மனமதிழத் திருப்பதிக மிசைத்தமிழிற் சிறக்கப் பாடும்
நாவரசு பதம்பரசு நமக்குயர்பொன் னாட்டரசு நல்குமன்றே.
இவரது குலம் முதலியன இவரியற்றிய அமுதாகரம் என்னும் வைத்திய நூலில் உள்ள சிறப்புப் பாயிரச் செய்யுளா னறியப்படுகின்றன. அதனையுமிங்கே காட்டுதும். அது:-
ஐயமின் முன்னூற் றையிரு விருத்தம்
செய்யசெந் தமிழாற் றெரித்துரை செய்தனன்
கங்கைமா நதிசூழ் காசிமா நகரும்
பங்கமில் பங்கயப் பைந்துணர் மாலையும்
ஆதிநான் மறைசே ரந்தண நாணையும்
கோதக லோதிமக் கொடியுமிங் குடையோன்
கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்கும்
துன்னிய வளவயற் சுன்னைநன் னாடன்.
என்பது.

[...] பாயிரத்திலிருந்து, இதனை இயற்றினோன் வரதபண்டிதனென்று தெரிகின்றது. இவ்வாசிரியன் பெயர் [...]
[...] குறித்துப் புராணம் பாடியது போலவே வரதபண்டிதர் திருமால் விரதங்களுட் சிறந்ததாகிய [...]
[...] வரத பண்டிதர் செய்தமையால் இதுவும் 18ம் [...]