மறைசையந்தாதி

ஆசிரியர் : சின்னத்தம்பிப் புலவர்
எழுதப்பட்ட வருடம் :
பதிப்பாசிரியர் :
பதிப்பிக்கப்பட்ட வருடம் :
உசாத்துணை : ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி

றைசையந்தாதி திருமறைக்காடெனப்படும் வேதாரணியத்திற் கோயில் கொண்ட வேதாரணியேசுவரர் மீது நல்லூர் சின்னத்தம்பிப்புலவரால் பாடப்பெற்ற நூற்றந்தாதி நூலாகும். இது கட்டளைக்கலித்துறை யாப்பினால் செய்யப்பட்ட திரிபந்தாதியாக விளங்குகின்றது. திருமறைக்காடாரை புகழ்ந்தும், அவரை வணங்கி மக்கள் ஈடேற்றமடையலாம் என்ற பொருளிலும் இதன் செய்யுள்கள் அமைந்துள்ளன. அகப்பொருட்டுறை தழுவித் தலைவி, தோழி, தலைவன் ஆகியோர் கூற்றுக்களாக அமைந்த பாடல்களும் பல உள. இதன் நூற்சிறப்புப் பாயிரமாக அமைந்துள்ள

செந்தா தியன்மணிப் பூண்புலி யூரற்குச் சேர்ந்தளித்துச்
சிந்தாத் தியானஞ்செய் வில்லவ ராயன் றிருப்புதல்வன்
நந்தா வளந்திகழ் நல்லைச்சின் னத்தம்பி நாவலன்சீர்
அந்தாதி மாலையை வேதாட வீசற் கணிந்தனனே

என்னும் செய்யுள், இதனை ஆக்கியோன் நல்லூர் வில்லவராயன் புதல்வன் சின்னத்தம்பி நாவலன் என்று தெரிவிக்கும். இந் நூற் சிறப்புப்பாயிரமளித்தவர் யாழ்ப்பாணம் வரதராசக் கவிராசர் என யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையாரின் பதிப்பிற் காணப்படுகின்றது.

வாசகர் கருத்துக்களை காட்டு / மறை