சிவதொண்டன்

ஆசிரியர் : நடராஜன்
எழுதப்பட்ட வருடம் : 1935 இலிருந்து இன்று வரை
பதிப்பாசிரியர் :
பதிப்பிக்கப்பட்ட வருடம் :
sivathondan-first-issue
நன்றி : சிவதொண்டன் நிலையம் யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்து சித்தர்கள் பரம்பரையிலே முக்கியமானவராகக் கருதப்படுகின்ற யோகர் சுவாமிகளின் அருங்கருத்துக்களை வெளிக்கொணரவென்று சுவாமிகளின் ஆசீர்வாதத்துடன் நடராஜன் என்பாரால் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகை இது.

1935ம் ஆண்டு மார்கழி மாதத்திலிருந்து “எண்ணுவார் நெஞ்சில் நண்ணுவார் ஈசன்” என்னும் சுலோசத்தை தாங்கி திங்கள்தோறும் சிவதொண்டன் வெளிவந்து மக்கள் மத்தியிலே அமைதியாக சமயப்பணி ஆற்றி வருகின்றது. சிவதொண்டனின் மூன்றாம் இதழ் முதலாய் நற்சிந்தனை எனும் தலைப்போடு சிவயோக சுவாமிகளின் திருவாய் மொழிகள் பதிவாக தொடங்கின.

சிவதொண்டன் ஏடு 2011ம் ஆண்டு பவள விழாவினை கண்டுள்ளது.

வாழி சிவசமயம் வாழிதிரு நீறுகண்டி
வாழிதிரு வைந்தெழுந்து மன்பர்களும் – வாழியரோ
வீடறியும் மேலோர் விழையுஞ் சிவதொண்டன்
சீடறிவு மன்பு நிறைந்து.

என்று வாழ்த்தி வணங்குவோம்.

வாசகர் கருத்துக்களை காட்டு / மறை

2 Comments

  1. T. Abarna சொல்லுகின்றார்: -

    I am the divotee of Sri Yogar Swamikal. I am very beleive and beloved his each words. And I like help Sivathondam nilayam also. If I’ll have time I should do. This is promiss over to Swamikal.

  2. Santhan சொல்லுகின்றார்: -

    The Sivathondan Society of Jaffna have launched its official website on 04th November 2010. You can see it on http://www.sivathondan.org
    You can find its Sivathondan Magazine page.