மேலும் சில நூல்கள்

கிள்ளைவிடு தூது

ஆசிரியர் : வரத பண்டிதர்
எழுதப்பட்ட வருடம் : 18ம் நூற்றாண்டு
பதிப்பாசிரியர் :
பதிப்பிக்கப்பட்ட வருடம் :
killaividu-thuthu

கிள்ளைவிடு தூது காங்கேசன்துறையைச் சேர்ந்த கண்ணியவளை என்னுமிடத்திலெழுந்தருளியுள்ள குருநாத சுவாமிமீது வரத பண்டிதரால் இயற்றப்பெற்றதாகும். இது தூதுப் பிரபந்த இலக்கணத்துக்கு அமைய கலிவெண்பாவாற் செய்யப்பட்டுள்ளது. இதன் காப்புச் செய்யுளடிகளாகிய

கொற்றமிகுந் தெய்வக் குருநாத சாமிதன்மேற்
சொற்றதமிழ்க் கிள்ளைவிடு தூதுரைக்க

என்பன இதன் பெயரை வலியுறுத்தும். 216 கண்ணிகளை கொண்ட இத்தூது கண்ணகியம்மன் கோபத்தாலுண்டாகும் அம்மைநோய் முதலியவற்றை ஆற்றவென உருவெடுத்த குருநாதன் பவனி கண்ட பெண்ணொருத்தி, அவன் மேலுற்ற காதலைத் தன் கிளிமூலஞ் சொல்லியனுப்பிக் “குருநாதர் மாலைதனை நீ வாங்கிவா” எனக் கிள்ளையைத் தூதனுப்பிய கதையை கூறுமுகத்தாற் குருநாத சுவாமியின் சிறப்பினைச் சொல்வதாயமைந்துள்ளது.

இது வரத பண்டிதராற் செய்யப்பட்டமையின், இதுவும் 18ம் நூற்றாண்டுக்குரியதாகும்.

வாசகர் கருத்துக்களை காட்டு / மறை